சரவணன் விவகாரம்: கதறி அழுத கவின் - சாண்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் சரவணனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் கவின் மற்றும் சாண்டி என்பது தெரிந்ததே. சேரன் விவகாரத்தின்போதே சரவணனுக்கு தான் இருவரும் ஆதரவாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சரவணன் நேற்று திடீரென வெளியேற்றப்பட்டது குறித்த அறிவிப்பை பிக்பாஸ் வெளியிடுவது போன்ற காட்சி இன்றைய புரமோ வீடியோவில் உள்ளது. பிக்பாஸின் இந்த அறிவிப்பைக் கேட்டு போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தாலும் கவின் மற்றும் சாண்டி ஆகிய இருவரும் கதறி அழுகின்றனர். சரவணனின் திடீர் இழப்பை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே தெரிகிறது.
மேலும் சரவணன் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். சரவணனின் வெளியேற்றம் குறித்த அறிவிப்பு சேரனுக்கும் கூட மன வருத்தத்தை தந்துள்ளதாக அவரது செய்கைகளில் இருந்து தெரியவருகிறது. ஒரு மூத்த போட்டியாளர் திடீரென வெளியேற்றப்பட்டது ஏன் என்று தெரியாமல் குழப்பத்தில் தவிக்கும் போட்டியாளர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அடுத்தடுத்த வீடியோக்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Day44 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/MOS3Kce7Ox
— Vijay Television (@vijaytelevision) August 6, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout