பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சம்பளம் எப்போது? சாக்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தால் வெளியேற்றப்பட்ட மதுமிதா, தனக்குரிய சம்பளத்தை விஜய் டிவி நிர்வாகம் உடனே தரவேண்டும் என்று மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து விஜய் டிவி நிர்வாகம் போலீஸ் புகார் அளித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சம்பளம் எப்போது கிடைக்கும் என்பது குறித்து சாக்சி அகர்வால் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது கூறியதாவது: மதுமிதா செய்த செயல் மிகவும் தவறு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் காண்ட்ராக்டில் கையொப்பமிடும் போது நிகழ்ச்சியை விட்டு வெளியேறி 100 நாட்களுக்கு பின்னர்தான் ஊதியம் வழங்கப்படும் என்று தெளிவாக தெரியப்படுத்தி இருந்தனர்' என்று கூறினார். எனவே இடையில் வெளியேறிய மதுமிதா சம்பளம் கேட்பது காண்ட்ராக்ட் விதிமுறைக்கு முரணானது என தெரிய வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கு அதிக ரசிகர்கள் கிடைத்துள்ளதாகவும் சாக்சி தெரிவித்தார்.
இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்னொரு போட்டியாளரான மீராமிதுன், 'பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தது சற்று வருத்தம் அளிப்பதாகவும், வெளியே வந்த பிறகு தனக்கு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com