பழிவாங்க காத்திருக்கும் சாக்சி: கவின் நிலைமை என்ன?

பிக் பாஸ் வீட்டில் வனிதா என்ற ஒரு வைல்ட் கார்டு எண்ட்ரியையே சக போட்டியாளர்களால் சமாளிக்க முடியாத நிலையில் தற்போது சாக்ஸி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகிய மூன்று சிறப்பு விருந்தினர்கள் புதிதாக வந்துள்ளனர். அபிராமி மற்றும் மோகன் வைத்யா குறித்து மற்ற போட்டியாளர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் சாக்சியின் வருகை கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே கவின் கூறிய கருத்துகளுக்கு வெளியில் பதிலடி கொடுத்துள்ள சாக்ஸி அதே கேள்விகளை கவினிடம் நேரடியாக கேட்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாக்ஸி உள்ளே வந்தவுடன் வத்திக்குச்சி வனிதா அவரை ஏற்றி விட்டுள்ளதால் எந்த நேரத்திலும் சாக்ஸி பொங்கி எழ வாய்ப்பு இருக்கிறது. பழி வாங்க காத்திருக்கும் சாக்சியைடம் கவின் சிக்குவாரா? கவின் நிலைமை என்ன என்பது போகப்போகத்தான் தெரியவரும்.

இந்த நிலையில் வெளியில் போனவர்களில் நீ மட்டும்தான் அப்படியே இருக்கின்றாய் என்று அபிராமியிடம் சாண்டி கூறுகிறார். அபிராமியும், மோகன் வைத்யாவும் கவின் குழுவினர்களுடன் சகஜமாக பேசி வரும் நிலையில் சாக்சி இப்போது வரை ஒரு முறைப்பு பார்வையை மட்டுமே பார்த்து வருகிறார். சாக்சியை பிக்பாஸ் உள்ளே அனுப்பியதன் நோக்கம் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கவின் செய்தால் தவறு, ஷெரின் செய்தால் சரியா?

இந்தவார நாமினேஷனில் சேரன் மட்டும் ஷெரின் ஆகிய இருவரை கவின் நாமினேட் செய்தார். ஷெரினுக்கு இந்த போட்டியில் வெல்ல அனைத்து தகுதிகளும் உள்ளது

'தல 61' திரைப்படம் மீண்டும் ரீமேக்கா?

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் 'பிங்க்' படத்தின் ரீமேக் என்பதும் அந்தப் படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

வாட்ஸ் அப் உதவியால் 6 மாவட்டங்களை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்: 

ராநாதபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் அவருக்கு புற்று நோய் தாக்கத்தால் முதுகுத்தண்டும் செயல் இழந்துவிட்டதால் எட்டு மணி நேரத்தில் புதுவையில்

நம்ம வீட்டு பிள்ளை படத்தின் அடுத்த அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

'சங்கத்தமிழன்' நாயகிக்கு டப்பிங் கொடுத்த நடிகை!

விஜய்சேதுபதி, ராஷிகன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சங்கத்தமிழன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.