இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்: கவின், ஷெரின் அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படும் படலம் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் சாக்சி, அபிராமி மற்றும் லாஸ்லியா ஆகிய மூவர் எவிக்சன் பட்டியலில் இருந்தனர். இந்த நிலையில் சற்றுமுன் நமக்கு கிடைத்த பிரத்யேக தகவலின்படி இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்து தெரிய வந்துள்ளது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது சாக்சி அகர்வால். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே வெளியேறியிருக்க வேண்டியவர். ஆனால் மீராமிதுன் திடீரென சேரன் மீது சுமத்திய குற்றச்சாட்டால் கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் தப்பித்தார். கடந்த வாரம் ரேஷ்மா மிகக்குறுகிய வித்தியாசத்தில் பின் தங்கியதால் சாக்சி மீண்டும் தப்பித்தார். ஆனால் இந்த வாரம் லாஸ்லியா மற்றும் அபிராமியுடன் போட்டியிட்டதால் இருவரை ஒப்பிடும்போது மிகக்குறைந்த வாக்குகள் பெற்றதால் சாக்சி வெளியேறுகிறார்.

சாக்சியின் வெளியேற்றத்தால் அவருடைய நெருங்கிய தோழி ஷெரினுக்கு நிச்சயம் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும். அதேபோல் கவினுக்கு ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் லாஸ்லியாவுக்கான ரூட் க்ளியர் என்பதால் மனதுக்குள் சந்தோஷம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைக்குரியவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வரும் நிலையில் இனி யாரால் புதிய பிரச்சனை ஆரம்பிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

கீர்த்திசுரேஷூக்கு வாழ்த்து தெரிவித்த புதிய விஐபி தோழி!

நேற்று 66வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகை கீர்த்திசுரேஷுக்கு 'மகாநதி' படத்தில் சிறப்பாக நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

சரவணனை மறந்த ஹவுஸ்மேட்ஸ்: கமல்ஹாசனாவது விளக்குவாரா?

கடந்த ஞாயிறு அன்று ரேஷ்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் திங்களன்று திடீரென சரவணன் வெளியேற்றப்பட்டார்.

யோகிபாபு நடிப்பில் மேலும் ஒரு 'ஹாரர் காமெடி' திரைப்படம்

தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில்

ரஜினியின் '2.0' சீன ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிய '2.0' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் ஆன நிலையில்

இதுக்கு பெயர் ஃப்ரெண்ட்ஷிப்பா? முகினுக்கு கமல் வைக்கும் கேள்வி!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களுக்கும் சுறுசுறுப்பாக இருக்கும் என்றே கருதப்படுகிறது