நைட்டு 1.30 மணிக்கு நீங்க என்ன பண்ணினிங்க தர்ஷன்? நெட்டிசன்கள் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை இன்று சக போட்டியாளர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து சாக்சிக்கு ஆதரவாக பேசிய நிலையில் தர்ஷன் சற்றே அதிகம் உணர்ச்சிவசப்பட்டு நைட்டு 2 மணிக்கு என்ன பிரெண்ட்ஷிப் வேண்டிக்கிடக்கு? என்று காரசாரமாக கேட்டார். இதற்கு கவினால் பதில் சொல்ல முடியவில்லை. லாஸ்லியாவும் இந்த கேள்வியால் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் கவினை இந்த கேள்வியை கேட்க தர்ஷனுக்கு தகுதி இருக்கின்றதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் தர்ஷனும் ஷெரினும் இரவு 1.30 மணிக்கு தனிமையில் பலமணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். வேறு சிலரும் விடிய விடிய பேசிய நிகழ்வுகளும் இந்த சீசனிலேயே இருந்திருக்கின்றது. அப்படியிருக்கும்போது கவின், லாஸ்லியாவை மட்டும் டார்கெட் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று தற்போது நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கவினுடன் தனக்குரிய உறவு என்ன என்பதையும், தனக்கு கவினுடன் எந்த அளவுக்கு பழக வேண்டும் என்ற லிமிட் தெரியும் என்றும் லாஸ்லியா தெளிவான விளக்கத்தை கூறிய பின்னரும் தர்ஷன் இவ்வாறு பேசியது தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு என்றால் தக்காள் சட்னியா? எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கவின், லாஸ்லியா பேச்சியில் எந்தவொரு தவறான நோக்கமும் இல்லை என்பதை அந்த நாளின் எபிசோடை பார்த்த அனைவருக்கும் புரிந்திருக்கும். லாஸ்லியாவும் தான் இரவில் கவினுடன் பேசியது உண்மைதான், ஆனால் அது நட்பின் அடிப்படையில் மட்டும்தான் என்றும் விளக்கினார். இதற்கு பின்னரும் நைட்டு 2 மணிக்கு என்ன பிரெண்ட்ஷிப் என தர்ஷன் கேட்டது அபத்தமாக இருப்பதாகவே பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Avasa pattu vaaya vitutiye kumaru ?? #tharsan
— SATA Sathiesh (@SataSathiesh) August 1, 2019
Neenga enna panuringa ipo ??..#பிக்பாஸ்3 #BiggBossTamil3@dancersatz pic.twitter.com/8f4RLT3FN3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments