மீராவை காப்பாற்ற பிக்பாஸ் செய்த தந்திரம்: பார்வையாளர்கள் அதிருப்தி

பிக்பாஸ் சீசனின் மூன்று சீசன்களிலும் சேர்த்து அதிக பார்வையாளர்களால் வெறுக்கப்பட்டவர் அனேகமாக மீராவாகத்தான் இருப்பார். ஜூலி, காயத்திரி ரகுராம், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர்களை எல்லாம் நல்லவர் ஆகிவிட்ட பெருமையைப் பெற்ற மீரா, இந்த வாரம் நிச்சயம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது

ஆனால் எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீராவை பிக்பாஸ் காப்பாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக நேற்றைய நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் ரகசிய அறை ஒன்றை கமலஹாசன் அறிமுகப்படுத்தினார். வீட்டை விட்டு வெளியேறும் நபர் ஒரு சில நாட்கள் இந்த ரகசிய அறையில் இருந்து விட்டு, அதன் பின் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் ஒரு நிகழ்வு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக நடைபெறும்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சுஜாவும், இரண்டாவது சீசனில் வைஷ்ணவியும் இவ்வாறு ரகசிய அறையில் சில நாட்கள் இருந்துவிட்டு, அதன் பின் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நேற்று கமலஹாசன் அறிமுகம் செய்த ரகசிய அறையில் மீராமிதுன் தங்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த அறையில் தங்கும் போட்டியாளர் இந்த வாரம் வெளியேறுபவராக இருக்கலாம், அல்லது அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறுபவராகவும் இருக்கலாம் என்று கமல்ஹாசன் கூறியதை அடுத்து, மீராவுக்காகவே இந்த ரகசிய அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. மீராவை வெளியேற்றிவிட்டால் மீதி இருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் இடையே பெரிய அளவில் சண்டை வர வாய்ப்பு இல்லை. எனவே நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறையும் என்று பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் நினைத்திருப்பதால் இந்த ரகசிய அறை தந்திரம் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பது அவர்களுடைய சமூக வலைத்தள கருத்துக்களில் இருந்து தெரிய வருகிறது