'உண்மை ஒருநாள் வெளிவரும்'! குறும்படம் போட்டும் திருந்தாத மீரா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன், கிராமத்து டாஸ்க்கின் போது சேரன் மீது ஒரு அபாண்டமான பழியைச் சுமத்தினர். சேரன் தன்னுடைய இடுப்பை தவறான நோக்கத்தில் பிடித்து இழுத்ததாகவும், அது தன்னை மிகவும் மனவேதனைக்கு உட்படுத்தியதாகவும் அவர் மீது ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தினார். இந்த குற்றச்சாட்டை சக போட்டியாளர்களில் சிலரும், பார்வையாளர்களும் நம்பவில்லை என்றாலும் நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இந்த விஷயம் குறித்து விரிவான விசாரணை நடத்தினார்
சேரனிடனும், மீராவிடமும் தன்னிலை விளக்கம் கேட்ட பின்னர், ஒரு குறும்படத்தை அவர் வெளியிட்டார். அந்த குறும்படத்தில் சேரன் எந்தவிதமான உள்நோக்கமும் இன்றி மீராவை தள்ளி விட்டது உறுதி செய்யப்பட்டது. சக போட்டியாளர்களும் இதனை உணர்ந்தனர். மேலும் மீரா, சேரன் தன்னை தள்ளி விட்ட பின்னரும் சிரித்துக் கொண்டே தான் டாஸ்க்கை தொடர்ந்தார். ஒரு ஆண் தன்னுடைய இடுப்பை தவறான நோக்கத்துடன் பிடித்தார் என்று தெரிந்தும், சிரித்துக்கொண்டே இயல்பாக ஒரு பெண்ணால் எப்படி இருக்க முடியும் என்று அபிராமி உள்பட ஒரு சிலர் கேள்வி எழுப்பியது, மீரா வேண்டும் என்றே சேரன் மீது குற்றச்சாட்டை கூறியுள்ளது நிரூபிக்கப்பட்டது
மேலும் ஒரு பெரிய ஆள் மீது குற்றம் சுமத்தினால் தான் தன்னுடைய முகம் வெளியே தெரியும் என்ற தந்திரத்தையும் மீரா கடைபிடித்துள்ளதாக கமல்ஹாசனும் மறைமுகமாக சுட்டிக் காட்டி, மீராவுக்கு அறிவுரை கூறினார். சக போட்டியாளர்கள் அனைவரும் மீரா செய்தது தவறு என்று கூறியும், குறும்படம்போட்டு நிரூபிக்கப்பட்டும், மீரா தன்னுடைய தவறை ஒப்புக் கொள்ளவில்லை. சேரன் அவ்வாறு தன்னுடைய இடுப்பை பிடித்ததை தான் அசெளகரிகமாக உணர்ந்ததாகவும், உண்மை ஒருநாள் வெளியே வரும் என்றும், மீண்டும் தனது தவறை நியாயப்படுத்தினார். இதனால் கமல் உள்பட பார்வையாளர்கள், சக போட்டியாளர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்தனர்
குறும்படம் போட்டும் மீரா திருந்தாமல் இருக்கின்றார் என்ற கவலை கமலுக்கும், இந்த ஜென்மம் திருந்தவே திருந்தாது என்ற எண்ணம் மற்றவர்களுக்கும் நிகழ்ச்சியின் இறுதியில் ஏற்பட்டது. மீரா அடிக்கடி ஒரு வார்த்தையை பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கூறுவார். நான் நானாகத்தான் இருக்கின்றேன், நான் நடிக்கவில்லை என்று. அது உண்மைதான் என்பது இப்போது புரிகிறது. மீராவின் உண்மையான கேரக்டரே இதுதான். அவர் நடிக்கவில்லை என்பது தெளிவாகிறது என்று பார்வையாளர்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com