பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்: பார்வையாளர்கள் நிம்மதி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு கிடைத்துள்ளது
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் சாக்சி அல்லது மீராமிதுன் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. கடந்த வாரத்தில் இருந்தே சாக்ஸின் போக்கு வித்தியாசமாக இருப்பதாகவும் குறிப்பாக நேற்றைய நிகழ்ச்சியில் கவினுடன் அவர் மோதியது அவரது நன்மதிப்பை வெகுவாக பாதித்ததாகவும் கூறப்பட்டு வந்தது
அதேபோல் ஒவ்வொரு வாரமும் ஒருவரை குறிவைத்து சண்டை போட்டு வரும் மீராமிதுன் சேரனின் இமேஜை டேமேஜ் ஆக்கும் வகையில், அவர் தன்னுடைய இடுப்பை பிடித்து இழுத்ததாக அபாண்டமாக ஒரு பழியைக் கூறினார். அந்த டாஸ்க்கின்போது சேரன் பிடித்து இழுத்த பின்னரும் மீரா சிரித்துக் கொண்டே நடந்து செல்வதை பார்க்க முடிகிறது. இதனால் அவர் கூறியது முழுக்க முழுக்க பொய் என்பது அதுமட்டுமன்றி வேண்டுமென்றே இந்த பிரச்சனையை பெரிதாக்கி சேரனின் மனதை புண்பட வைத்தது அனைவரின் வெறுப்பை சம்பாதித்தது.
இந்த நிலையில் இதனை அடுத்து நேற்று முழுவதும் மீராமிதுனுக்கு வாக்குகளே விழவில்லை என்றும் அதனால் அவர் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இந்த வாரம் அவர் வெளியேற்றப்படுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. மீராமிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். வனிதா, மீராமிதுன் ஆகிய இரண்டு சர்ச்சைக்குரிய போட்டியாளர்களும் வெளியேறிவிட்டதால் இன்னும் சில நாட்களுக்கு பிக்பாஸ் வீடு அமைதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com