சேரனுடன் செல்பி எடுத்த மீராமிதுன்: இது எப்போ?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவராகிய மீராமிதுன், சேரனை கடந்த சில வாரங்களாக குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். அவர் கடைசியாக சேரன் மீது கூறிய இடுப்பு குற்றச்சாட்டு எடுபடவில்லை என்றாலும், மீண்டும் வெகுவிரைவில் வேதாளம் முருங்கை மரம் ஏறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சேரனுடன் மீராமிதுன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சினிமா விழாவில் இந்த செல்பி புகைப்படம் எடுத்து கொண்டது போல் தெரிகிறது. சேரனை தனக்கு இதற்கு முன் தெரியாது என்று மீராவும், மீராவுடன் தான் பழகியது இல்லை என்று சேரனும் கூறி வரும் நிலையில் இருவரும் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே முன்னரே சேரனுக்கும் மீராவுக்கும் நெருங்கிய பழக்கம் இல்லாவிட்டாலும் செல்பி எடுக்கும் அளவுக்கு குறைந்தபட்சம் அறிமுகமாவது இருந்துள்ளது. ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாதவர் போல் காட்டிக்கொள்ளும் மர்மம் என்ன? என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இருவரில் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் இந்த மர்மம் விலகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com