இது பிக்பாஸ் நிகழ்ச்சியா? சீரியல் ஷூட்டிங்கா? ஆவேசமான மதுமிதா கணவர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டதால் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று மதுமிதா செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய வெளியேற்றத்தில் உண்மையில் என்ன நடந்தது? என்பதை விளக்கினார்.
இந்த நிலையில் மதுமிதாவின் கணவர் ஜோயல் சற்று ஆத்திரமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ’திடீரென ஒருநாள் நள்ளிரவில் உங்கள் மனைவியை அழைத்து கொண்டு செல்லுங்கள்’ என்று எனக்கு தகவல் வந்தபோது நான் பட்ட வேதனை எனக்கு மட்டுமே தெரியும். மதுமிதா கையில் 12 இடத்தில் கத்தி காயங்கள் இருந்தது. ஒரு கேம்ஷோ தானே என்று நம்பிய அனுப்பியதற்கு இத்தனை பெரிய தண்டனையா?
பிக்பாஸ் வீட்டில் இருக்குறவங்க ஒண்ணு சண்டை போடணும் அல்லது சண்டை போடுறது மாதிரி நடிக்கணும். லவ் பண்ணனும் அல்லது லவ் பண்றது மாதிரி நடிக்கணும். அப்பதான் ரொம்ப நாளைக்கு இருக்க முடியும். நியாயமா விளையாடினால் வெளியேத்திடுவாங்க’ என்று ஆவேசமாக மதுமிதா கணவர் ஜோயல் தெரிவித்தார்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆபாசமாக உடையணிந்ததை மதுமிதா கூறினால் அதற்கு மதுமிதாவை கண்டிப்பார்கள். இது என்ன உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியா? அல்லது சீரியல் ஷூட்டிங்கான்னு சந்தேகமா இருக்குது. மதுமிதா படபடன்னு பேசினாலும் மனசில எதையும் வச்சுக்கிட மாட்டாங்க, வெள்ளேந்தியா இருப்பாங்க. இன்னும் அந்த ஷோ ஸ்கிரிப்ட் இல்லைன்னு அவங்க நம்பிக்கிட்டு இருக்காங்க’ என்று மதுமிதா கணவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments