கேப்டன் டாஸ்க்கில் மதுமிதா செய்த தில்லாலங்கடி வேலைகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய கேப்டன் டாஸ்க்கில் மதுமிதா, ஷெரின், தர்ஷன் ஆகிய மூவர் போட்டியிட்டனர். இந்த டாஸ்க்கில் கண்ணை கட்டிக்கொண்டு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வண்ணத்தில் உள்ள CAPTAIN என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களை சரியாக எடுத்து போர்டில் வைக்க வேண்டும்.
இந்த டாஸ்க்கில் கண் கட்டப்பட்டிருந்தால் ஷெரினும், தர்ஷனும் ஒவ்வொரு எழுத்தையும் தடவித்தடவி எடுத்தனர். ஆனால் மதுமிதா மட்டும் சரியாக தனது புளு வண்ணத்தின் எழுத்துக்களை எடுத்தது மட்டுமின்றி எந்தவித திணறலும் இல்லாமல் ஒவ்வொரு எழுத்தையும் சரியாக வைத்தார். குறிப்பாக பாக்ஸில் இருந்து வெளியே விழுந்த 'P' என்ற எழுத்தை சரியாக மதுமிதா வெளியே எடுத்ததும் சந்தேகத்தை கொடுத்தது. மேலும் C என்ற புளூ எழுத்தை தவறுதலாக தர்ஷன் எடுக்க, அதை சரியாக மதுமிதா புடுங்கியதும் சந்தேகம் வலுப்பட்டது. கடைசி எழுத்தான 'T' என்ற எழுத்தை எடுத்து போர்டில் அவர் மிகச்சரியாக வைத்ததும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பில் கண்ணை கட்டாமல் இருந்தால் கூட போட்டியாளர்கள் கொஞ்சம் திணறுவார்கள். ஆனால் மதுமிதா கண்ணை கட்டியும் எப்படி திக்காமல், திணறாமல் அனைத்து எழுத்தையும் சரியாக வைத்தார் என்பதே கேள்விக்குறி
மேலும் போட்டி முடிந்ததும் சேரன் கூறியதை உன்னிப்பாக கவனித்து ஒவ்வொரு எழுத்தையும் எடுத்து கோர்த்ததாகவும் அவருக்கு நன்றி என்றும் மதுமிதா கூறினார். ஆனால் சேரன் கூறிய எந்த ஒரு வார்த்தையும் பார்வையாளர்களுக்கே தெளிவாக கேட்கவில்லை. அனைவரும் கூச்சல் போட்ட நேரத்தில் சேரன் கூறியது மட்டும் எப்படி மதுமிதாவுக்கு கேட்டது என்றும் தெரியவில்லை. மொத்தத்தில் மதுமிதாவுக்கு கண்ணை கட்டியவர்கள் சரியாக கட்டவில்லை என்றும் அவர் ஒவ்வொன்றையும் பார்த்தே இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் தெரிய வருகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருப்பதால் கேப்டன் பதவிக்காக மதுமிதா ஏமாற்றியுள்ளார் என்றே தோன்றுகிறது
Did #madhu Cheated? All clippings in a single video.
— Imadh (@MSimath) August 16, 2019
Comment pannunga#biggbosstamil #biggbosstamil3 #பிக்பாஸ் #பிக்பாஸ்3 pic.twitter.com/RPuKznuP3n
the letter "T" too she fixed exactly without an inch of missing
— pandu boss (@pandu_bb) August 16, 2019
dei enna namma muttal nu nenakirangalaa !! #BiggBossTamil3 pic.twitter.com/mEquVdgPGi
Alien level precision pic.twitter.com/h0XPRnHrf9
— Iam (@ilovepeeace) August 16, 2019
Also how does she know the placement of P and adhayum avlo precision-ah vachittu. Santhosha pattuttu yaaru jeicha-nu oru innocent question vera keppa.
— ராவணன் (@_raja) August 16, 2019
Final-ah #cheran sonnadha mattum kettu ellathayum sonnen-nu oru justification vera. ????#BiggBossTamil #BiggBossTamil3 pic.twitter.com/M52IYiEg6i
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout