தலைவர் பதவிக்கு போட்டியிட்டு மூக்குடைந்த மதுமிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தலைவர் பதவிக்காக ஒரு புதிய டாஸ்க்கும் வைக்கப்படும். அந்த வகையில் இன்று தலைவர் பதவிக்காக போட்டியிடும் மதுமிதா, முகின் மற்றும் சாண்டி ஆகிய மூவருக்கும் ஒரு டாஸ்க் வைக்கப்பட்டது

இந்த டாஸ்கில் 2 ஆண்களுக்கு இடையே சரிசமமாக விளையாடிய மதுமிதாவுக்கு கடைசி நேரத்தில் ஒரு சின்ன காயம் ஏற்பட்டது. இதனால் அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. இதனை அடுத்து போட்டியாளர்கள் அனைவரும் அந்த ரத்தத்தைத் துடைத்து அவருக்கு முதலுதவி செய்தனர். இந்த தலைவர் பதவிக்கான போட்டியில் முகின் வெற்றி பெற்றது போல் புரமோ வீடியோவில் தெரிகிறது. இருப்பினும் ஆர்வத்துடன் இந்த போட்டியில் பங்கேற்ற மதுமிதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இன்று தலைவராக தேர்வு செய்யப்படும் நபர் அடுத்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டை வழி நடத்த வேண்டும். முக்கியமாக கவின் - சாக்சி - லாஸ்லியா விஷயத்தையும், சேரன் - சரவணன் விஷயத்தையும் சமாளிக்க வேண்டிய சவால் புதிய தலைவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

கும்பகோணம் ஐயர் சிக்கன்: சர்ச்சை விளம்பரத்தால் பரபரப்பு

இதுவரை நாம் 'கும்பகோணம் ஐயர் காபி; என்று தான் விளம்பரம் செய்வதை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் முதல்முறையாக மதுரையில் உள்ள ஒரு உணவகம் கும்பகோணம் ஐயர் சிக்கன்

போனிகபூருக்கு மாலை மரியாதை செய்த மூன்று பேர்!

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை'  திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் சிறப்பு காட்சி இன்று திரையிடப்பட்டது

'நேர் கொண்ட பார்வை' ஸ்பெஷல் காட்சி: தாறுமாறான படம் என விமர்சனம்

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 

ஸ்ருதிஹாசனின் 'பறையடி' இசைக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்!

உலகநாயகன் கமல்ஹாசன் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் இசைத் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்பதும் அவர் ஒரு நல்ல பாடகி என்பதும் தெரிந்ததே.

விஜய்யின் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நடித்துள்ளாரா?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.