'அத்த நீ செத்த', நாமினேஷனில் சிக்கும் லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெறும் ஓப்பன் நாமினேஷனில் ஏற்கனவே லாஸ்லியா, மதுமிதாவையும், சாக்சி கவினையும் நாமினேட் செய்துள்ள தற்போது முதல்முறையாக லாஸ்லியாவும் நாமினேஷனில் சிக்கியுள்ளார். அவரை ஷெரின் நாமினேட் செய்துள்ளார். முதலில் இருந்த லாஸ்லியா தற்போது இல்லை என்றும், இதில் எந்த லாஸ்லியாவை நம்புவது என்று தெரியவில்லை என்றும் ஷெரின் காரணம் தெரிவித்தார்

அதே போல் தர்ஷனும், முகினும் ரேஷ்மாவை நாமினேட் செய்தனர். ரேஷ்மா நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பக்கமும் பேசுவதாக தர்ஷன் கூற, 'அத்த நீ செத்த' என்று முகின் கூறுகின்றார்.

மேலும் சேரனை ரேஷ்மா நாமினேட் செய்கிறார். மற்றவர்கள் மீது காட்ட வேண்டிய கோபத்தை தன்மீது காட்டியதற்காக சேரனை தான் நாமினேட் செய்வதாக ரேஷ்மா காரணம் தெரிவித்தார். வழக்கம்போல் சாண்டியை இந்த வாரமும் யாரும் நாமினேட் செய்யவில்லை என்பது போல் தெரிகிறது. இருப்பினும் இன்றைய நிகழ்ச்சியின் முடிவில்தான் யார் யார் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்

இந்த வாரம் நாமினேசனில் லாஸ்லியா ஒருவேளை சிக்கினாலும், லாஸ்லியா ஆர்மியினர் அவருக்கு ஓட்டு போட்டு காப்பாற்றிவிடுவார்கள் என்றும், அவருக்கு முன்னர் சரவணன், சாக்சி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் நெட்டிசன்கள் இந்த புரமோ வீடியோ குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

நடுக்காடு, கையில் துப்பாக்கி: ஒரு த்ரில் பயணத்தில் பிரதமர் மோடி

பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுப்பயணம் செய்யாத நாடு இல்லை என்றே கூறப்படுகிறது. அவர் இந்தியாவில் இருந்ததை விட வெளிநாட்டில் இருந்த நாட்கள் தான் அதிகம் என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வதுண்டு

பாடை கட்டிய அஜித்-விஜய் ரசிகர்கள்: டுவிட்டர் இணையதளத்தில் பரபரப்பு 

அஜித்-விஜய் ரசிகர்கள் டுவிட்டர் இணையதளத்தில் மோதிக் கொள்வது என்பது தினமும் நடைபெறும் ஒரு வழக்கமான செயல் என்பது டுவிட்டரை தினமும் கவனித்து வரும் நபர்களுக்கு தெரிந்ததே 

வைல்ட் கார்டு எண்ட்ரி ஆகும் திருநங்கை: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

'பிக்பாஸ் 3' தமிழ் நிகழ்ச்சி கடந்த ஐந்து வாரங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து பாத்திமாபாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகிய

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கேட்ட ஐசரிகணேஷிடம் நீதிபதிகள் விடுத்த வேண்டுகோள்

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று முடித்து வைத்த நீதிபதிகள், ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக நன்கொடையாளர்

பிரதமருக்கு எதிராக 49 பேர் கையெழுத்து: மணிரத்னம் கையெழுத்திட்டாரா?

கட்ந்த சில நாட்களுக்கு முன் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதத்தை தங்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைத்ததாகவும்,