காதலில் கவின், கடுப்பில் சாக்சி, கண்டுகொள்ளாத லாஸ்லியா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் சாக்சி உள்பட நான்கு பெண்களை எளிதில் மடக்க முயன்ற கவினால், லாஸ்லியாவிடம் இன்னும் நட்புடன் கூட நெருங்க முடியவில்லை. அதுமட்டுமின்றி கவினை 'அண்ணா' என்று அழைத்து கடுப்பேற்றியும் வருகிறார். தன்னை சந்திக்க வேண்டாம், தன்னிடம் பேச வேண்டாம் என்று கவினை நாகரீகமாக அவர் தவிர்த்து வருவதும் தெரிகிறது
இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் கவின் மீண்டும் லாஸ்லியாவிடம் கொக்கி போடுகிறார். 'உனக்கு என்ன வேண்டும்' என்று கவின் கேட்க அதற்கு லாஸ்லியா 'எனக்கு எதுவும் தேவையில்லை ஒண்ணும் வேண்டாம்' என்று மறுக்கின்றார். இவர்களுடைய உரையாடலை அருகில் இருந்து கேட்கும் சாக்சி கடுப்பானாலும், லாஸ்லியாவின் மனதில் ஏதோ சோகம் இருப்பதை அறிகிறார். இன்றைய நிகழ்ச்சியில் அந்த சோகம் என்னவென்று தெரிய வாய்ப்பு உள்ளது.
நேற்று தர்ஷன் கேப்டன் பதவியை அபிராமிக்காக விட்டுக்கொடுத்தவுடன் முதல் நபராக பாராட்டு தெரிவித்த லாஸ்லியா, இதுவரை கவினை எந்த விசயத்திற்காகவும் பாராட்டியதில்லை என்பதும், கவின் மீது அவருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது.
கண்டிப்பா ஏதோ இருக்கு! #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #VijayTelevision pic.twitter.com/3p6RsNLBg4
— Vijay Television (@vijaytelevision) July 9, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments