வனிதா-தர்ஷன் பிரச்சனையின்போது ஒதுங்கி இருந்தது ஏன்? லாஸ்லியா விளக்கம்
- IndiaGlitz, [Sunday,July 14 2019]
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை அதிகம் பேச வைத்து பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் கமல்ஹாசன். பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலும் அமைதியாக இருக்கும் லாஸ்லியா, வனிதா-தர்ஷன் பிரச்சனையின்போது கூட அமைதியாக இருந்தது ஏன் என்று கமல்ஹாசன் கேட்டபோது அதற்கு லாஸ்லியா கூறியதாவது:
வனிதா பிரச்சனையில் தர்ஷன் பேசியது அனைத்துமே சரியாக இருந்தது. நான் என்ன பேச வேண்டும் என்று நினைத்தேனோ அதையேதான் தர்ஷன் பேசினார். இதனால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. மேலும் தர்ஷன், வனிதாவிடம் சாரி கேட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவரிடம் கூறினேன், அவரும் அதை ஏற்றுக்கொண்டார் என்று லாஸ்லியா கூறினார். லாஸ்லியாவின் இந்த கருத்துக்கு பார்வையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் சேரன் பிரச்சனையின்போது ஜெயிலுக்கு போக விரும்பியதன் காரணத்தை விளக்கிய லாஸ்லியா, அதன்பின்னர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டதை அடுத்து 'மைனா' கதை ஒன்றையும் நெகிழ்ச்சியுடன் கூறினார். சிறுவயதில் தானும் தனது சகோதரியும் மைனா ஒன்றை வளர்த்து வந்ததாகவும், அந்த மைனாவின் மீது தான் மிகுந்த பாசம் வைத்திருந்ததாகவும், ஆனால் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் அந்த மைனா இறந்துவிட்டதாகவும், இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வருத்தத்தை தந்ததாகவும் கூறினார். லாஸ்லியா சொன்ன கதையை கேட்டு பார்வையாளர்கள் சிலரின் கண்களில் கண்ணீர் வந்தது.
நேற்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியா இலங்கை தமிழில் பேசியதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. அவரை அதிக நேரம் பேச வைத்த கமல்ஹாசனுக்கு பாராட்டுக்களையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.