நீங்க பொதுவா சொல்லியிருக்கலாம்: கமலிடம் லாஸ்லியா வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் கன்ஃபக்சன் அறையில் கமல்ஹாசனுடன் லாஸ்லியா பேசுவது போன்ற காட்சிகள் உள்ளன. இதில் லாஸ்லியா கூறியபோது, 'நான் ஒருசில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். அது எந்த அளவுக்கு உண்மையாக உள்ளது என்பதில் எனக்கு சந்தேகமும் உள்ளது. ஒரு விஷயத்தை பொதுவாக சொன்னீர்கள் என்றால் அதை நான் மனதில் வைத்து கொள்வேன்' என்று கமல்ஹாசனிடம் கூற அதற்கு கமல்ஹாசன் 'நான் பொதுவாகத்தான் கூறினேன்' என்று பதிலலித்தார்.
மேலும், 'நான் பெயர் எதுவும் சொல்லாமல் பொதுவாகத்தான் சொன்னேன்' என்று கூறிய கமல், 'பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு போட்டியாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் சுற்றுலாத்தலமாக மாற்றிவிட வேண்டாம்' என்றும் நீங்கள் வீட்டின் உள்ளே செல்லும்போது உங்களுக்கு யாரையும் தெரியாது, அதேபோல் நினைத்து கொண்டு வெற்றிக்காக செயல்படுங்கள்' என்று கூறினார்.
கவினுடன் லாஸ்லியாவுக்கு ஏற்பட்ட நட்பு, ஈர்ப்பு காதலாக மாறி வருவதையும், இந்த காதலால் போட்டியில் இருந்து இருவரும் விலகி காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரிவதாகவும், போட்டியில் கவனம் செலுத்திவிட்டு வெளியே வந்தவுடன் உங்கள் முடிவை நீங்கள் எடுத்து கொள்ளலாம் என்ற ரீதியில் கமல்ஹாசன் பேசியதாக தெரிகிறது. ஆனால் தற்போது கவின், லாஸ்லியா இருவரும் நடந்து கொள்வதை பார்த்தால் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதை விட காதலில் வெற்றி பெற வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுவது போல் தெரிகிறது.
#Day63 #Promo1 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/8ynmly4syD
— Vijay Television (@vijaytelevision) August 25, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments