லாஸ்லியாவில் பொறியில் சிக்கி தனியாளாக போகும் கவின்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் பிளேபாயாகவும் ஒரே நேரத்தில் நான்கு பெண்களுக்கு கொக்கி போட்டு கொண்டிருக்கும் கவின் மீது ஆண் போட்டியாளர்கள் பொறாமையாகவும், பெண் போட்டியாளர்களில் சிலர் எரிச்சலாகவும் பார்த்து வருகின்றனர்.
குறிப்பாக கவினை அண்ணா என்று அழைத்து கடுப்பேற்றும் லாஸ்லியா, கவினுக்கு பொறி வைக்கிறார் என்பது இன்றைய முதல் புரமோவில் இருந்து தெரிய வருகிறது. இன்று ஒருநாள் முழுவதும் தன்னை பார்க்ககூடாது என்றும், தானே பார்த்தாலும் நீ பார்க்கக்கூடாது என்றும் லாஸ்லியா கூற, அதற்கு கவின் நாள் முழுவதும் பார்த்து கொண்டிருக்க வேண்டும் என்றோ, வச்சகண் வாங்காமல் பார்க்க வேண்டும் என்றோ டாஸ்க் கொடு, இந்த டாஸ்க்கை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூற, அதெல்லாம் கிடையாது இதுதான் டாஸ்க் என்று லாஸ்லியா பொறி வைக்கின்றார்.
ஏற்கனவே கவின் அடிக்கடி லாஸ்லியாவுடன் பேசுவதாகவும், சுற்றுவதாகவும் நேற்று சாக்சி குறை கூறி வருத்தப்பட்ட நிலையில் இன்று லாஸ்லியா இப்படி ஒரு டாஸ்க்கை கவினிடம் கொடுத்து அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day16 #Promo1#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/PIaI9eWGa9
— Vijay Television (@vijaytelevision) July 9, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout