என்னால ஃபைனல்ஸ் போக முடியாது: லாஸ்லியா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று கவின் வெளியேறிய நிலையில் கவினின் வெளியேற்றத்தால் லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய இருவரும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். கவினை சமாதானப்படுத்தி அவரது முடிவை மாற்ற இருவரும் தீவிர முயற்சி செய்தும் கவின் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் நேற்று அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் கவின் சென்ற பிறகு நடந்த டாஸ்க்கில் தீவிர கவனம் செலுத்தாமல் இருந்த லாஸ்லியா இன்னும் கவினின் பிரிவை தாங்க முடியாமல் சோகத்தில் தான் உள்ளார். இதனை அடுத்து சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் தர்ஷனிடம் 'நான் ஃபைனல்ஸ் போக விரும்பவில்லை என்று கூறுகிறார். அதையே நினைத்து கொண்டிருந்தால் எப்படி? நீ உனது அப்பா அம்மாவுக்காகவும் வெளியே போன கவினுக்காகவும் விளையாடு என்றும், இன்னும் பத்து நாள் தான் உள்ளது, அதன் பிறகு நீ வெளியே போய் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்' என்று தர்ஷன் அறிவுரை கூறுகிறார்.
இருப்பினும் தர்ஷனின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளும் நிலையில் லாஸ்லியா இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது. இந்த வாரம் லாஸ்லியா வெளியேற வாய்ப்பு இல்லை என்ற நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் இறுதி போட்டியில் லாஸ்லியா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தகுதி பெறுவார் என்றே தெரிகிறது.
#Day96 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/TszkaT6I0A
— Vijay Television (@vijaytelevision) September 27, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments