ஒருத்தரோட ஃபீலிங்ஸோட விளையாடறடு பெரிய தப்பு: கவினுக்கு சாட்டையடி தந்த லாஸ்லியா
- IndiaGlitz, [Friday,July 19 2019]
பிக்பாஸ் வீட்டில் கவினின் காதல் நாடகம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் ஜாலியாக பழகி பிளேபாய் போல் வலம் வந்து கொண்டிருந்த கவின், ஒரு கட்டத்தில் சாக்சி மற்றும் லாஸ்லியாவுடன் நெருங்கி பழகினார். காதல், நட்பு என இருவரையும் குழப்பி தானும் குழம்பிய கவின், இன்று இருவரிடமும் அதிருப்தியை பெற்று கொண்டுள்ளார்.
இன்றைய புரமோவில் கவினிடம் லாஸ்லியா இதுகுறித்து வருத்தமாக கூறியபோது, 'நீ பண்ணியது தப்பு கவின், பெரிய தப்பு. ஒருத்தரோட ஃபீலிங்ஸோட விளையாடறடு பெரிய தப்பு. இப்படியெல்லாம் ஒருத்தரு இருப்பாங்களான்னு எனக்கு தெரியாது. எல்லாமே என்னாலதான்னு ஒரு ஃபீல் ஆகுது. பைத்தியக்காரி மாதிரி நான் பிஹேவ் பண்ணியிருக்கேன்' என்று கூறிவிட்டு கோபத்துடன் எழுந்து செல்கிறார் லாஸ்லியா.
இன்றைய முதல் புரமோவில் கவினுடன் சாக்சி கடுமையாக பேசிய நிலையில் தற்போது லாஸ்லியாவுடனான வருத்தத்துடன் பேசியுள்ளதால் இருவருடனான உறவும் முடிவுக்கு வந்துள்ளது போல் தெரிகிறது. இனியுள்ள மீதி நாட்களில் கவின், தேவதாஸ் போல் சோகமாக இருக்கப்போகின்றாரா? அல்லது இதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் ஜாலியாக இருக்க போகின்றாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day26 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/qGZrThHiye
— Vijay Television (@vijaytelevision) July 19, 2019