கவலைப்படாதே கவின்: ஆறுதல் கூறிய ஆசிரியை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வரும் கவினின் தாயார் நேற்று ஒரு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவினுக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஏற்பட்ட புகழ் காரணமாக கவின் பெயரும் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இதுகுறித்து கவின் ஆசிரியை தனது சமூக வலைத்தளத்தில் கூறிய ஆறுதல் கருத்துக்கள் பின்வருமாறு:
தமிழ்நாட்டில் இருக்கும் நடுத்தர வர்க்கம் சந்திக்கும் விஷயங்களில் ஒன்று தான் இது. கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் பெரிதாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் கவின் ஏன் இல்லை என்றால் அவர் அப்போது மைனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார். இன்று எத்தனை பேர் பெற்றவர்கள் கடனை அடைக்கின்றார்கள். ஆனால் கவின், தான் கடன் அடைக்க தான் பிக்பாஸ் நிகழ்ச்சி வந்ததாக ஈகோ இல்லாமல் கூறினார் உன்னை மாதிரி கடன் அடைக்க நான் உள்ளே இருப்பதாக ஈகோ இன்றி கூறினார். மது கூட 'உன்னை போல் கடன் அடைக்க பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று என்று கேவலப்படுத்திட்டார். 29 வயதில் கவின் எவ்வளவு கஷ்டப்பட்டு விட்டாலும் எதையும் வெளிக்காட்டவில்லை. முகின், தர்ஷன் ஆகியோர் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கின்றார். கவின்! நீ கவலைப்படாதே, என்னை போன்ற தாய்மார்களின் ஆதரவு என்றும் உனக்கு உண்டு. வென்று வா என்று அந்த ஆசிரியை பதிவு செய்துள்ளார்.
Poongothai teacher about Kavin pic.twitter.com/1q6hZmWJJi
— dinesh rockzz..ᴺᴷᴾ (@talk2mdinesh) August 30, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com