இதுவும் உங்கள் திட்டத்தின் ஒரு பகுதியா? கவினிடம் கமல் கேள்வி

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூ.5 லட்சத்தை பெற்று கொண்டு வெளியேறிய கவின், இன்று கமல்ஹாசனுடன் சந்திக்கும் நிகழ்வு நடக்கவிருப்பதை ஏற்கனவே பார்த்தோம். அதன்படி சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் கமல்-கவின் சந்திப்பு நடைபெறுகிறது.

‘ஏன் இப்படி செஞ்சீங்க’ என்ற கமலின் கேள்விக்கு ‘எனக்கு தோணுச்சு அதான் பண்ணிட்டேன்’ என்று கவின் பதிலளிக்கின்றார். அதன்பின் கமல், ‘இன்னும் கொஞ்சம் பொறுமை காத்திருந்தால் பணம் கொஞ்சம் அதிகம் கிடைத்திருக்கும் ஆனால் நீங்கள் பணத்திற்காக இதை செய்யவில்லை என்று நான் நினைக்கின்றேன்’ என்று கூற அதற்கு கவின் ’ஆமாம்’ என்று கூறுகிறார்.

முன்னதாக இன்னொரு புரமோவில் கவின் லாஸ்ல்லியாவிடம் ‘சாரி எனக்கு தெரியும் நீங்கள் எமோஷனலாக எவ்வளவு தூரம் மனம் வருந்துவீர்கள் என்று, தெரிஞ்சும் நான் பண்ணினேன்’ என்று கூறியபோது இடையில் குறுக்கிட்ட கமல், ‘நீங்கள் லாஸ்லியாவை ‘நீங்கள்’ என்றும் ‘நீ’ என்றும் ‘வாடா’ என்றும் கூறுகின்றீர்களே ஏன்? என்ற கேட்டதற்கு கவின், ‘லாஸ்லியாவின் வீட்டில் உள்ளவர்களும் பார்த்து கொண்டிருப்பார்கள், அதனால் தான்’ என்று கூறியதும் கமலின் ரியாக்சன் வேற லெவலில் இருந்தது