என்னால ஹேண்டில் பண்ண முடியலை: சாரி சொன்ன கவின்

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக முக்கோண காதலில் சிக்கி தவிக்கும் கவின், லாஸ்லியா, சாக்சி இருவரையும் எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றார். இருவரும் நெருக்கமாக அன்பாக கவினிடம் பழகிய நிலையில் தற்போது இருவருமே கவினை வெறுக்க தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் இன்று அனைவர் முன்னிலையிலும் கவின் மன்னிப்பு கேட்கிறார். நான் எல்லோரிடமும் நட்பாக பழகத்தான் முயற்சி செய்தேன். ஆனால் அது எங்கேங்கோ போய் முடிந்துவிட்டது. என் தப்புதான்னு நான் இப்போ புரிஞ்சுகிட்டேன். இந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதத்தில் நான் பழகியிருக்கேன். நேற்றில் இருந்து என்னென்னமோ நடந்துவிட்டது. அதை என்னால் ஹேண்டில் பண்ண முடியவில்லை. எனவே எல்லோரிடமும் சாரி கேட்டுக்கிறேன்' என்று உருக்கமாக கூறினார்.

கவினின் பேச்சை கவனித்து கொண்டே அமைதியாக சோகமாக லாஸ்லியா உட்கார்ந்திருக்க, சாக்சியோ பாத்ரூமில் சென்று கதறி அழுகிறார். நாளை கமல் தோன்றும் நாள் என்பதால் பிக்பாஸின் 'காதல் திரைக்கதை' இன்றுடன் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் மீராமிதுன் பிரச்சனை, இன்னொரு பக்கம் காதல் பிரச்சனை என நாளை கமல் முன் இரண்டு பஞ்சாயத்துக்கள் எழ வாய்ப்பு உள்ளது

More News

ஒருத்தரோட ஃபீலிங்ஸோட விளையாடறடு பெரிய தப்பு: கவினுக்கு சாட்டையடி தந்த லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் கவினின் காதல் நாடகம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் ஜாலியாக பழகி பிளேபாய் போல் வலம் வந்து கொண்டிருந்த கவின்,

தனுஷின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் நடித்துள்ள 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் ஆகிய மூன்று படங்களும் இந்த ஆண்டுக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ஆடை' ரிலீஸில் திடீர் சிக்கல்: காலை காட்சி ரத்தானதால் ரசிகர்கள் அதிருப்தி

இன்று விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' மற்றும் அமலாபால் நடித்த 'ஆடை' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு முன்பதிவும் செய்யப்பட்டது.

வெளியே முன்ஜாமின், உள்ளே ஜெயில்: மீராமிதுனின் நிலைமை!

பிக்பாஸ் வீட்டின் ஜெயிலில் அடைக்கப்பட்ட மீராமிதுன், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் முன்ஜாமின் பெற்றுள்ளார்.

கமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவளித்த மற்றொரு அரசியல் தலைவர்

சூர்யா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். எதிர்கால சந்ததியினர் கற்கும் புதிய கல்வி கொள்கை குறித்து கேள்விகளை எழுப்பினார்.