சாக்சி என்னை காலி பண்றா? கவின் ஆவேசம், லாஸ்லியா கண்ணீர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் கவின் சாக்சி, லாஸ்லியா என்ற முக்கோண காதல் விவகாரம் கடந்த இரண்டு வாரங்களாக உச்சக்கட்டத்தில் உள்ளது. கவின், சாக்சி இடையேயான காதல் நேற்று பிரேக் அப் ஆகிவிட்டது. இதனை நேற்றைய மொட்டை கடிதம் டாஸ்க்கில் கவின் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் இன்று சாக்சியை மிகவும் கோபமாக திட்டுகிறார் கவின். சாக்சி என்னை காலி பண்ண முடிவு செய்து விட்டதாகவும் அவர் வழியில் இனிமேல்தான் செல்ல மாட்டேன் என்றும் கூறுகிறார். கவினை சமாதானப்படுத்த சரவணனும் மதுமிதாவும் முயற்சிக்கின்றனர். ஆனால் அதற்கு .கவின் தன்னை சாக்சி ஏமாற்றி வருவதாக கோபத்துடன் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில் கவின், சாக்சி ஆகிய இருவரும் சேர்ந்து மற்ற போட்டியாளர்களை பைத்தியக்காரர்களாக ஆக்குவதாகவும் சேரன் ஆவேசமாக தெரிவித்தார். இதனை அடுத்து 'சாக்சிக்கு நடந்த அநியாயத்திற்கு நான்தான் பொறுப்பு என்றும் தயவு செய்து இது குறித்து யாரும் என்னிடம் கேட்க வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாகவும் லாஸ்லியா வேண்டுகோள் விடுக்கிறார். மொத்தத்தில் பிக் பாஸ் வீட்டில் இன்று காதல், பிரேக் அப், கண்ணீர் , கோபம் என பலவிதமான உணர்வுகளும் இருக்கும் என்று தெரிகிறது.
#Day39 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/8EYzy8xnYQ
— Vijay Television (@vijaytelevision) August 1, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout