நீ உன் வேலையை பாரு, நான் என் வேலையை பாக்குறேன்: கவினிடம் சாக்சி கறார்

பிக் பாஸ் வீட்டில் சாக்சியும் கவினும் கடந்த சில நாட்களாக நெருக்கமாக இருந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே திடீரென முட்டிக்கொண்டது. ஒரே ஒரு சாக்லேட் இருவருக்கும் இடையே சண்டையை மூட்டிவிட்டது. நேற்று சாக்சி கொடுத்த ஒரு சாக்லேட்டை கவின், லாஸ்லியாவிடம் கொடுத்ததாக சாக்சி தவறாக நினைத்துக் கொண்டதே இந்த சண்டைக்கு காரணம்.

சாக்சியை கவின் நேற்று எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதனை கேள்விப்பட்ட லாஸ்லியாவும் கவின் கொடுத்த சாக்லெட்டை கவினிடமே திருப்பி கொடுத்துவிட்டு கோபித்துக் கொண்டதால் தற்போது கவின் இருதலை கொள்ளி எறும்பு போல் உள்ளார்.

இந்த நிலையில் இன்று சாக்சியை மீண்டும் சமாதானப்படுத்த கவின் முயற்சி செய்கிறார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. இனிமேல் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்றும், நீ உன் வேலையே பாத்துட்டு போ, நான் என் வேலையைப் பார்க்கிறேன் என்று சாக்சி கறாராக கூறி விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார் கவின்.