கவினுக்கு வந்த மொட்டை கடிதங்கள்: சாக்சி கண்ணீர்

பிக்பாஸ் வீட்டில் மீராமிதுன், வனிதா ஆகிய இரண்டு சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஓரளவிற்கு போட்டியாளர்கள் அமைதியாக உள்ளனர். இருப்பினும் கவின், சாக்சி ஆகிய இருவரின் காதல் சண்டையால் அவ்வப்போது பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. இந்தப் பிரச்சினைகளால் இருவரின் உறவுகளில் விரிசல் அடைந்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் தன் மனதில் உள்ள கேள்விகளை கடிதமாக எழுதி ஒரு பாக்ஸில் போட பிக்பாஸ் உத்தரவிடுகிறார். இந்த உத்தரவை அடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் எழுந்த கேள்வியை எழுதியுள்ளனர். பெரும்பாலானோர் கவின், சாக்சி இடையில் உள்ள உறவு குறித்த கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

இதற்கு கவின் பதில் அளித்து கொண்டிருந்த நிலையில் திடீரென சாக்சி எழுந்து சென்றுவிடுகிறார். அவர் தனிமையில் உட்கார்ந்து கண்ணீர் விட அவருக்கு ஷெரின் ஆறுதல் கூறுகிறார். கவினும், சாக்சியின் செயலால் கண்ணீர் விடுகிறார்.

கவினை அடுத்து லாஸ்லியா உள்பட போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கின்றனர். நேற்றைய நிகழ்ச்சி 'ஆட்டம் கொண்டாட்டம்' டாஸ்க்கால் படுஜாலியாக சென்ற நிலையில் இன்று சென்டிமென்ட் மட்டும் உருக்கமான காட்சிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.