சந்தேகப்படும் சாக்சி: சமாதானப்படுத்தும் கவின்!
- IndiaGlitz, [Monday,July 08 2019]
கவின் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒதுக்கிவிட்டு லாஸ்லியாவுடன் நெருக்கமாவதாக சாக்சி சந்தேகப்பட, அவரை சமாதானப்படுத்த கவின் முயற்சி செய்வதாக இன்றைய அடுத்த புரமோ வீடியோ வெளிவந்துள்ளது.
நீ முன்பு போல் என்னுடன் பேசுவதில்லை என்றும், லாஸ்லியாவுடன் அடிக்கடி பேசுகிறாய் என்றும் சாக்சி குற்றம் சாட்ட, அதற்கு 'மச்சான் நான் மதியம் கூட உன்கூட தான் சாப்பிட்டேன்' என்று சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்.
நேற்றைய நிகழ்ச்சியின்போது தான் யாரையும் உண்மையாக காதலிக்கவில்லை என்றும், பிக்பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கவே அனைவரிடமும் நட்புடன் தான் பழகுவதாகவும் கமல் முன்னிலையில் கவின் கூறியும், இன்னும் தன்னை கவின் காதலிப்பதாக சாக்சி நினைத்து கொண்டிருப்பதாக வரும் காட்சிகள் யாரை முட்டாளாக்க என தெரியவில்லை.
மொத்தத்தில் லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பது பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவருக்கு கிடைத்து வரும் கைதட்டலின் மூலம் புரிந்துவிட்டது. எனவே அவரை குறிவைத்து கார்னர் செய்வது போல் தெரிகிறது. இதையும் கடந்து லாஸ்லியா முன்னேறுவார் என நம்புவோம்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day15 #Promo2 #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/b1x30fSwAm
— Vijay Television (@vijaytelevision) July 8, 2019