டாஸ்க்கில் அசத்திய கவின் - லாஸ்லியா: காதலை மறந்து டைட்டிலை நோக்கி பயணம்
- IndiaGlitz, [Tuesday,September 17 2019]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்ற போட்டியாளர்கள் டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் காய் நகர்த்தி சாமர்த்தியமாக விளையாடி கொண்டிருந்தபோது ஒருசில வாரங்களில் எதற்காக வந்தோம் என்பதையே மறந்து முழுக்க முழுக்க காதல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார் கவின். அதற்கு அடுத்த ஒருசில வாரங்களில் லாஸ்லியாவும் காதலில் விழுந்தார். இதனால் இருவரது ஆட்டமும் சோடை போனது.
லாஸ்லியாவின் பெற்றோர்கள் மற்றும் சகோதரிகள் கொடுத்த அறிவுரை, கவினுக்கு நண்பர் கொடுத்த அறை ஆகியவை தற்போது இருவரையும் காதலில் இருந்து மீட்டு போட்டியில் கவனம் செலுத்துவதில் திரும்பியுள்ளது. குறிப்பாக இன்றைய மூன்றாவது புரமோவில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் சாண்டி, தர்ஷன், சேரன், ஷெரின் ஆகியோர்கள் எல்லாம் அவுட் ஆகிவிட கவினும் லாஸ்லியாவும் முழுமையாக ஈடுபட்டு வெற்றியை நோக்கி சென்றுள்ளனர். இந்த டாஸ்க்கின் முடிவு என்ன? என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியும் என்றாலும் இந்த டாஸ்க்கில் இருவரின் ஈடுபாடு உண்மையில் அசத்தலாக இருந்தது
இதேபோல் இன்னும் மூன்று வாரம் முழுமையாக கேமில் ஈடுபட்டால் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் போட்டி கொடுப்பது மட்டுமின்றி டைட்டிலை நோக்கியும் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது
#Day86 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/2ZrvD3GAhH
— Vijay Television (@vijaytelevision) September 17, 2019