சாக்சியை மறந்த கவின், முகினை மறந்த அபிராமி: பிக்பாஸ் வீட்டில் பிரளயமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் டாப் 3 இடங்களை பெறுபவர் யார் என்பது குறித்த கமல்ஹாசனின் கேள்விக்கு கவின் பதிலளிக்கையில் அவருக்கு தனது காதலியான சாக்சியின் பெயர் நினைவுக்கு வரவே இல்லை. அவர் முதல் பெயராக தர்ஷனையும், இரண்டாவதாக லாஸ்லியாவையும் மூன்றாவதாக சாக்சியையும் கூறுகின்றார். இதனால் நிச்சயம் கடுப்பாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது பெயரை கவின் சொல்லாதது கூட ஜீரணித்துவிடுவார், ஆனால் லாஸ்லியாவின் பெயரை கவின் கூறியது நிச்சயம் அவரை கடுப்பேற்றியிருக்கும்.
அடுத்ததாக அபிராமி கூறும்போதும் தர்ஷன் பெயரைத்தான் முதலில் கூறுகின்றார். 19 வயதில் ஒரு பையன் எல்லா கஷ்டத்தையும் பார்த்து, அதையும் தாண்டி இங்கே வந்து சாதித்து வருகிறார் என்பது பெரிய விஷயம் என்று கூறுகிறார். அபிராமியும் தனது காதலன் முகினுக்கு முதலிடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கஸ்தூரியால் கேப்டன் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் சேரனுக்கு டாப் 3 இடம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் இந்த டாப் 3 கேள்வியால் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு பிரளயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/6FTzhZllwO
— Vijay Television (@vijaytelevision) August 11, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments