பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த கஸ்தூரி: கவின், சாக்சி கலக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் விமர்சனம் செய்து வந்த நடிகை கஸ்தூரி இன்று திடீரென பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக நுழைந்துள்ளார். கஸ்தூரியை பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து அவரை இன்முகத்துடன் வரவேற்று உள்ளனர்.

கஸ்தூரியின் வரவு பிக்பாஸ் வீட்டில் ஒரு திடீர் திருப்பத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிக்பாஸ் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை தனது சமூக வலைதளங்களில் எழுப்பிய கஸ்தூரி, அந்த கேள்விகளை போட்டியாளர்களிடம் நேரில் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையிலும் சாக்சியிடம் தான் அதிக கேள்விகள் கேட்க வேண்டும் என கஸ்தூரி கூறியது சாக்சியை கலக்கத்திற்கு உண்டாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி கவின் குறித்தும் கஸ்தூரி அதிக விமர்சனம் செய்துள்ளார். அந்த விமர்சனத்தையும் அவர் பிக்பாஸ் வீட்டில் கவின் முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரியை சிறப்பு விருந்தினராக வந்துள்ளாரா? அல்லது போட்டியாளர்களில் ஒருவராக வந்து உள்ளரா? என்பது குறித்து தெரியவில்லை என்றாலும் அவர் இருக்கும் ஒரு சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக போரடிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த நிலையில் கஸ்தூரி இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'நேர்கொண்ட பார்வை' ரிலீஸ்! வாழ்த்திய பிரபலங்கள், குவியும் பாராட்டுக்கள்

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

அஜித் படம் பார்க்க விடுமுறை கேட்ட கல்லூரி மாணவர்: அதிர்ச்சி அளித்த ஆசிரியர்

கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது ஒரு சில தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கும் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவின் பொக்கிஷம்: பாரதிராஜா புகழாராம்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி வரும் 10ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 'பிகில்' படத்தில் இடம்பெற்ற 'சிங்கப்பெண்ணே'

மீண்டும் இணைகிறதா 'என்னை அறிந்தால்' டீம்?

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்தப் படமான 'தல 60' திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்கும்

பொள்ளாச்சி பெண்களை கேள்வி கேட்டவர்களுக்கு 'தல' சொன்ன பதில்: இயக்குனர் நவீன்

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் முதல் காட்சி இன்னும் ஒரு சில மணி நேரங்களில் திரையிடப்பட உள்ள நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.