பத்த வச்சிட்டியே பரட்ட! கஸ்தூரி மீது கடுப்பில் கவின், லாஸ்லியா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் வனிதா மற்றும் மீராமிதுன் ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் சண்டை சச்சரவு இன்றி அமைதியாக சென்று கொண்டிருந்தாலும், கவின், சாக்சி, லாஸ்லியா முக்கோண காதல் பார்வையாளர்களை கொஞ்சம் அதிருப்தி அடைய செய்தது. இதனை அடுத்து நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கும் கஸ்தூரியின் வரவிற்கு பின்பு பிக்பாஸ் வீடு கொஞ்சம் சுறுசுறுப்பாகி உள்ளது.
குறிப்பாக கஸ்தூரி கவினை கேள்விகளால் துளைத்து எடுக்கும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு திருப்தி தருகிறது. இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் கவின், லாஸ்லியா காதல் குறித்து ஒரு வில்லுப்பாட்டு மூலம் கூறுகிறார்.
பத்த வச்சுட்டியே பரட்டை என்ற ஆரம்பிக்குமாறு கஸ்தூரி, கவினுக்கு பெயரிலேயே 'வின்' இருந்தாலும் மனசு முழுக்க லாஸ்'ஐ விரும்புவதாகவும், அது ஏன் என்றே தெரியவில்லை என்றும் கூறி, லாஸ்லியாவுக்கு ஒரு 'ஓ' போடுங்க என்று கூறுகிறார். கஸ்தூரியின் இந்த பேச்சு கவின், லாஸ்லியா ஆகிய இருவரையும் தர்மசங்கடபடுத்தியுள்ளது என்பது தெரிகிறது.
மேலும் கவின், லாஸ்லியாவை அட்டாக் செய்யும் வகையில் கஸ்தூரி பேசினாலும் நேற்றில் இருந்து சாக்சியின் முகமும் ஒரு மாதிரியே உள்ளது. எந்த நேரத்திலும் கஸ்தூரியுடன் சாக்சி மோதும் நிலை ஏற்படலாம் என தெரிகிறது.
#Day47 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/aITW6sgHWt
— Vijay Television (@vijaytelevision) August 9, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments