பிக்பாஸ் புரமோ: வழக்கம்போல் புரியாமல் பேசிய கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,July 13 2019]

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் அளவுக்கு அந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்களை வெளியிடுவதில் தான் சேனலின் புத்திசாலித்தனம் உள்ளது. தினமும் வெளியாகும் மூன்று புரமோக்கள் அந்த நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை எகிற வைத்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் தோன்று நாள் என்பதால் கூடுதல் சுவாரஸ்யம் இருக்கும் என்பது உண்மை. இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமல்ஹாசன், 'தன் நிலை உணரவேண்டும், தன்னிச்சையாக செயல்பட வேண்டும், தைரியமாக செயல்பட வேண்டும். அப்படி இல்லைன்னா என்ன நடக்கும் என்பதை இத்தனை நாட்களாக பார்த்து வந்தோம். இப்போது நாமும் இருக்கின்றோம் என்பதை நினைவுபடுத்தும் நேரம் வந்துவிட்டது என்று கூறினார். வழக்கம்போல் கமல்ஹாசன் பேசிய இந்த கருத்து புரியாமல் பலர் குழம்பி வருகின்றனர்.

இன்று எவிக்சன் பட்டியலில் இருந்து ஒருவர் காப்பாற்றப்பட வாய்ப்பு உள்ளது. அது வனிதா, மீரா மற்றும் மதுமிதா ஆகியோர்களில் ஒருவராக இருக்கலாம். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் யார் என்பது நாளைய நிகழ்ச்சியில் தெரியும்.