வெற்றி முக்கியம் தான், ஆனால்.. பிக்பாஸ் கமல் எச்சரிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களின் தியாக மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வெற்றியை நோக்கிய பயணம் கொஞ்சம் தீவிரமாகியுள்ளது. குறிப்பாக நாம் ஏதாவது வித்தியாசமாக செய்து வெற்றி அடைவதை விட வெற்றி பெறும் நிலையில் உள்ளவர்களை கவிழ்த்துவிட்டால் போதும் நாம் முன்னேறி வந்துவிடலாம் என்ற எண்ணம் ஒருசில போட்டியாளர்களுக்கு வந்துள்ளது.

அந்த வகையில் பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் தர்ஷன், ஷெரின், லாஸ்லியா ஆகியோர் மீது வன்மங்கள் வீசப்படுகிறது. தர்ஷன், ஷெரின் ஆகிய இருவருக்கும் இடையே ஏதோ இருப்பதாக வதந்தியை இட்டுக்கட்டி இருவரையும் டேமேஜ் ஆக்குவது, லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது கொடுத்து அவரை மக்கள் மத்தியில் மோசமானவராக காட்ட முயற்சிப்பது ஆகிய உள்ளடி வேலைகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமல்ஹாசன், ‘வெற்றி முக்கியம் தான், எப்படியாவது வெற்றி என்பது ஒரு முறை. இப்படித்தான் வெல்வேன் என்ற லட்சியத்தோடு இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் இரண்டாவதுதான் சிறந்தது என்பதை எடுத்து சொல்லும் நேரம் இது’ என்று கூறுகிறார். வெற்றிக்காக குறுக்கு வழியை கடைபிடிப்பவர்களுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்திருக்கும் கமல்ஹாசன் இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே அதனை நேரடியாக கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

நமீதாவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்: வைரலாகும் புகைப்படங்கள்

அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்த நடிகை நமிதா, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

கடைசி நிமிடத்தில் விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிப்பு: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ஆறுதல்

இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் நேற்று திட்டமிட்டபடி நிலவை நெருங்கி அதன் ஆர்பிட்டரிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரை நள்ளிரவு திட்டமிட்டபடி

அருண்விஜய்யின் அடுத்த த்ரில் படத்தின் இயக்குனர்!

இந்த ஆண்டு அருண்விஜய் நடித்த 'தடம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் அவர் தற்போது 'அக்னி சிறகுகள்', 'பாக்ஸர்' மற்றும் 'மாஃபியா' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இனிமேல் நான் தர்ஷன் வாழ்க்கையில் இல்லை: சனம் ஷெட்டியின் கண்ணீர் பேட்டி!

பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷன் மற்றும் ஷெரின் ஆகிய் இருவரும் நெருக்கமாக பழகி வந்தபோதிலும் இருவரும் நல்ல நண்பர்களாகவே பழகி வருகின்றனர். ஒருவரை ஒருவர் விரும்புவதாகவோ

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!

'ரஜினி கட்சி தொடங்கி கட்சி கொடி, கொள்கைகளை அறிவித்த பிறகே அவரது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும்