காலில் விழும் சரவணன், தடுக்கும் சேரன்: முடிவுக்கு வந்த மோதல்
- IndiaGlitz, [Saturday,August 03 2019]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சேரன் மற்றும் சரவணன் ஆகிய இருவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது தெரிந்ததே
ஒரு கட்டத்தில் சரவணன் மிகுந்த ஆத்திரமாகி சரவணனை 'வாடா போடா' என்றும் 'வாய்யா போய்யா' என்றும் பேசியது அநாகரிகமாக கருதப்பட்டது. சேரன் பதிலுக்கு சரவணனுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் எழுந்து சென்று தனது கோபத்தை காட்டியது அவரது பெருந்தன்மையை காட்டுவதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்
இந்த நிலையில் எதிர்பார்த்தது போலவே கமல்ஹாசன் முன்னிலையில் இன்று இந்த பஞ்சாயத்து வந்தது. அப்போது கமலஹாசன் 'ஆரம்பத்திலிருந்தே உங்கள் இருவருக்கும் சிறிய உரசல் இருந்து வந்ததை நான் கவனித்து வருகிறேன். நான் உச்ச நட்சத்திரமாக இருந்த போது அவர் உதவி இயக்குனராக இருந்தவர், அதனால் அவரை திட்டும் உரிமை எனக்கு உண்டு என்று நீங்கள் கூறியதை கேட்டேன். என்னுடைய கருத்து என்னவெனில் அந்த உரிமை யாருக்கும் கிடையாது என்பதுதான் என்று கமல்ஹாசன் கூற, அதனை சரவணன் ஒப்புக்கொண்டார்
இதனை அடுத்து சேரனிடம் தன்னை மன்னித்து விடும்படி சரவணன் அவரது காலில் விழ முயற்சிக்க அதை தடுத்த சரவணன், 'நான் என்றுமே உங்கள் நண்பர்தான்' என்று கூற இருவரும் சமாதானம் அடைந்தனர். இதனை அடுத்து இருவருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. இந்த சம்பவங்கள் இன்றைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்பதால் இன்றைய நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#Day41 #Promo2 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/vlDJuPIYwh
— Vijay Television (@vijaytelevision) August 3, 2019