பிக்பாஸ் டைட்டிலை வெல்வது யார்? தற்போதைய நிலவரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் லாஸ்லியா, சாண்டி, முகின் மற்றும் ஷெரின் ஆகிய நால்வர் இருந்து வரும் நிலையில் இந்த நால்வரில் யார் டைட்டிலை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு போட்டியாளர்களை மட்டுமன்றி பார்வையாளர்களிடம் பெருமளவு உள்ளது.

கவின் கடந்த வாரம் வெளியேறி விட்டதால் அவரது ஆதரவாளர்கள் லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய இருவரில் ஒருவருக்கு அல்லது இருவருக்கும் பகிர்ந்து வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் திடீரென வெளியேறியதால் தர்ஷன் ஆதரவாளர்களுக்கு முகினுக்கு வாக்களிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி லாஸ்லியா அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பதாகவும் இரண்டாம் இடத்தில் முகின் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சாண்டி மற்றும் ஷெரின் அடுத்தடுத்த உள்ளனர். இது இன்றைய நிலைமைதான். இனிவரும் மூன்று நாட்களில் பதிவாகும் வாக்குகளின் அடிப்படையில் இந்த நிலை மாறுமா? அல்லது இதே நிலைமை நீடித்து லாஸ்லியா டைட்டிலை கைப்பற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

More News

'எனை நோக்கி பாயும் தோட்டா'வின் இறுதியான ரிலீஸ் தேதி: கவுதம் மேனன்

தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

தர்ஷன் வெளியேறியதற்கு ஷெரினே காரணம்: மீண்டும் பிரச்சனையை கிளப்பும் வனிதா

பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா வந்தாலே பிரச்சனையும் சேர்ந்து வந்துவிடும் என்பதே கடந்த 100 நாட்களின் பிக்பாஸ் வரலாறாக உள்ளது. முதல் முறை பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக வந்தபோது

தனுஷ்-செல்வராகவன் படத்தில் இளம் இசையமைப்பாளர்!

தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தொடர்ச்சியாக மூன்று படங்களை தயாரிவுள்ளார் என்பது தெரிந்ததே. அதன் அதில் முதல் படமான 'அசுரன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது.

தனுஷின் 'அசுரன்' ரன்னிங் டைம் குறித்த தகவல்!

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மார்பகம் பற்றி பேச கூச்சப்பட வேண்டாம்: நடிகை வரலட்சுமி

மார்பகம் என்பது நமது உடலில் உள்ள ஒரு அங்கம் என்றும், அதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து வெளியே பேச யாரும் கூச்சப்பட வேண்டியதில்லை என்றும் நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.