நான் இதை எதிர்பார்த்தேன்: எவிக்சன் குறித்து கமலிடம் ஷெரின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் வெளியேறிய நிலையில் இந்த வாரம் அதாவது இன்று, வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படவுள்ளார். இன்று வெளியேறுவது தர்ஷன் என்று ஏற்கனவே செய்திகள் கசிந்துள்ள நிலையில் இன்றைய முதல் புரமோவில் ‘எவிக்சனை நான் எதிர்பார்க்கின்றேன்’ என்று ஷெரின் கமலிடம் கூறுகின்றார்.

கவின் பணத்தை வாங்கி கொண்டு சென்றதால் இந்த வாரம் எவிக்சன் இருக்காது என்று எண்ண வேண்டாம் என்றும், வழக்கம்போல் எவிக்சன் உண்டு என்றும், தர்ஷன், லாஸ்லியா, ஷெரின் ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்றும் கமல் கூறிய நிலையில் ‘இந்த வாரம் நான் தான் வெளியேற்றப்படுவேன் என எதிர்பார்க்கின்றேன்’ என்று ஷெரின் கூற, அப்படியென்றால் உங்களுக்கு ஒரு வேலை கொடுக்கின்றேன்’ என்று கமல் கூறுவதோடு இன்றைய முதல் புரமோ முடிவடைந்துள்ளது.

அடுத்தடுத்த புரமோக்களில் இன்று வெளியேறுவது யார்? என்பது குறித்த தகவல் இருக்கும் என்றும், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே இன்று வெளியேறுவது யார்? என்பதை உறுதி செய்ய முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத வெளியேற்றம்: அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே டைட்டிலை வெல்வார் என்ற எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவர் தர்ஷன். அவருடைய நேர்மையான விளையாட்டு, கேமில் இருந்த ஈடுபாடு

'தல 60' படம் குறித்த முக்கிய தகவல்

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் நேற்று எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்க உள்ளார்

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் யோகிபாபுவின் 4 திரைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களான யோகிபாபு தற்போது அஜித், விஜய் உள்பட கிட்டத்தட்ட அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.

கபடி கோச் ஆக தமன்னா நடிக்கும் திரைப்படம் 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருந்து வரும் தமன்னா  நடிப்பில் 'சைரா நரசிம்மரெட்டி', 'பெட்ரோமாக்ஸ்' மற்றும் 'ஆக்சன்' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

இதுவும் உங்கள் திட்டத்தின் ஒரு பகுதியா? கவினிடம் கமல் கேள்வி

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூ.5 லட்சத்தை பெற்று கொண்டு வெளியேறிய கவின், இன்று கமல்ஹாசனுடன் சந்திக்கும் நிகழ்வு நடக்கவிருப்பதை ஏற்கனவே பார்த்தோம்.