வனிதா 'அதை' கடைசி வரை சொல்லவே இல்லை: லாஸ்லியா வருத்தம்
- IndiaGlitz, [Monday,July 15 2019]
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வனிதா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸின் இந்த முடிவு ஆச்சரியமாக இருந்தாலும் அனைவருக்கும் திருப்தியாக இருந்தது. பிக்பாஸ் வீட்டின் பல பிரச்சனைகளுக்கு காரணமான வனிதா, வீட்டை விட்டு வெளியேறுவதால் அந்த வீட்டில் உள்ள பலருக்கு நிம்மதி என கருதப்படுகிறது.
இந்த நிலையில் வனிதாவின் வெளியேற்றம் குறித்து சக போட்டியாளர்கள் நேற்று கமல்ஹாசனிடம் கூறியதாவது:
சேரன்: வனிதா மிகவும் சத்தமாக பேசியது வீட்டில் உள்ள அனைவருக்குமே ஒரு தொந்தரவாக இருந்தது. சில விஷயங்கள் பேசும்போது சம்பந்தப்பட்டவர்கள் வருத்தப்படுவார்கள் என்ற எண்ணமே அவருக்கு இல்லை. இதனால் அவர் மீது நிறைய பேர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது
கவின்: சில விஷயங்களில் அவரது முடிவு போல்டாகவும், சரியாகவும் இருந்தாலும் எல்லா விஷயத்திலும் அவர் எடுத்த முடிவுகள் சரியானது என்று சொல்ல முடியாது. தர்ஷன் சண்டை போட்ட போது ஒரு ஆண், பெண்ணிடம் சத்தமாக பேசக்கூடாது என்று அறிவுரை கூறினார்கள். ஆனால் அதேபோல் நான் மதுமிதாவிடம் சத்தமாக பேசியபோது அவர் அந்த அறிவுரையை எனக்கு கூறவில்லை. தர்ஷனிடம் தமிழ்நாட்டில் இருக்கின்றாய் என்பதை ஞாபம் வைத்து கொள் என்று கூறினார். ஆனால் அதேபோல் மது, தமிழ்ப்பெண் என்று கூறியபோது பிரச்சனை திசை மாறிவிட கூடாது என்பதற்காக நாங்கள் கத்தினோம். எந்த தவறை மது செய்யக்கூடாது என்று நாங்கள் நினைத்தோமோ, அதே தவறைத்தான் வனிதாவும் செய்தார்,.
தர்ஷன்: தான் ஒரு தவறு செய்தால், அந்த தவறை சரி என காட்டுவதிலேயே வனிதா குறியாக இருந்தார்கள். அந்த தவறை எடுத்து காட்டும் நபர் கூறுவதை அவர் பொருட்படுத்துவதே இல்லை. இந்த விஷயம் மக்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம்
லாஸ்லியா: வனிதாவுக்கு வந்த நாள் முதல் அவர் என்ன சொல்கின்றாரோ அதுதான் சரி என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. இங்கு நடக்கும் சின்ன சின்ன பிரச்சனையில் அவர் தலையிட்டதால் அந்த பிரச்சனை பெரிதாக மாறியது. அவர் தலையிடாமல் இருந்திருந்தால் அந்த பிரச்சனை தானாகவே முடிந்திருக்கும். மேலும் தர்ஷனை 'சாரி' கேட்க சொன்ன வனிதா, அவரும் தர்ஷனிடம் 'சாரி' கேட்டிருக்க வேண்டும். கடைசி வரை அவர் சாரி' கேட்கவே இல்லை என்று வருத்தத்துடன் கூறினார்.
ஷெரின், சாக்சி, ரேஷ்மா ஆகிய மூவரும் வனிதா ஒரு குழந்தை மாதிரி என்றும், சத்தமாக பேசினாலும் அவர் நியாயமாக பேசுவார் என்றும், தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் கஷ்டங்களை அனுபவித்து வருவதால் அவரது குரல் மேலோங்கியிருக்கின்றதே தவிர அவரிடம் நியாயம் உள்ளது என்றும் பேசினர். மதுமிதா உள்பட மற்றவர்கள் வனிதா வெளியேற்றம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டனர்.