வனிதாவை வச்சு செய்யும் ஹவுஸ்மேட்ஸ்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சர்ச்சைக்குரிய போட்டியாளர்களான வனிதா, மீராமிதுன், சாக்சி ஆகியோர் வெளியேறியவுடன் நிகழ்ச்சி போரடிக்க தொடங்கியதால் பார்வையாளர்களை சுறுசுறுப்பாக்க கஸ்தூரியை பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் களமிறக்கினர். ஆனால் கஸ்தூரி வந்த முதல் நாளே அவர் ஒரு டம்மி என்பது தெரிந்துவிட்டதால் உடனே வனிதாவை களமிறக்கினர்.

இந்த முறை பிக்பாஸ் குழுவினர்களின் குறி தப்பவில்லை. வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அபிராமி, முகின் இடையே இருந்தது காதல் அல்ல, முகினுக்கு வேறொரு காதல் வெளியே உள்ளது. அபிராமி ஏன் உன்னையே தாழ்த்தி கொள்கிறாய்? என்று பேசி இந்த காதலுக்கு முற்றுபுள்ளி வைத்தார். இதனையடுத்து முகினிடம் அபிராமி பொங்கி எழ ஒரு வழியாக இந்த காதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் முகின் இமேஜ் சுக்குநூறாக உடைந்ததால் அவர் கடும் அப்செட்டில் உள்ளார்.

முகினை தேற்றும் முயற்சியில் ஹவுஸ்மேட்ஸ் உள்ளனர். குறிப்பாக நிலைமையை சரியாக புரிந்து கொண்ட தர்ஷன், 'அவ உன் வீக்னெஸ்ஸை பயன்படுத்துறா என்று போட்டு உடைத்தார். சாண்டியும் வனிதாவை கடுமையாக பேச அவருக்கு கவினும் சப்போர்ட் செய்வதால் வனிதாவை அனைவரும் சூழ்ந்து கொண்டு வச்சு செய்கின்றனர். ஆனால் எத்தனை பேர் வந்தாலும் சமாளிக்கும் திறன் கொண்ட வனிதா அனைவருக்கும் பதில் கூறி வருகின்றார். குறிப்பாக முகினுக்கு வெளியே இருக்கும் காதல் குறித்து தனக்கு தெரியும் என்றும், அந்த பெண்ணை தனக்கு நன்றாக தெரியும் என்றும் கூறி அனைவரின் வாயை அடைக்கின்றார்.

பிக்பாஸ் வீடே களேபரமாகி இருக்கும் நிலையில் இதை எதையும் கண்டுகொள்ளாமல் லாஸ்லியா அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது