வனிதாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ்மேட்ஸ்: தொடரும் சேரனின் மெளனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் நேற்றைய ஓப்பன் நாமினேஷனின்போது வனிதா செய்த பிரச்சினையால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய விருது என்ற உயரம் பெற்ற சேரனும், பல படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்ற ஷெரினும், இதுவரை வெற்றியை பார்க்காத இளைஞர்களுக்காக விட்டுக் கொடுக்கலாம் என்பது தனது எண்ணம் என்பதால் இருவரையும் நாமினேட் செய்வதாக கவின் கூறினார். இந்த காரணத்தை கவின் கூறியதும் சம்பந்தப்பட்ட சேரனும் ஷெரினுமே அமைதியாக இருந்த போதிலும், சம்பந்தமே இல்லாத வனிதா பொங்கி எழுந்து கவின் கூறியது சரியான காரணம் இல்லை என்று வனிதா வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் கவினும் வனிதாவும் முட்டி மோதிக் கொண்டனர்.
அதேபோல் சாண்டி எமோஷனலாக கவினையும் லாஸ்லியாவையும் நாமினேட் செய்து விட்டு அழுத போது இது அழுவதற்கான ஷோ இல்லை என்று சாண்டியை வெறுப்பேற்றும் வகையில் வனிதா பேசியது மற்றவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனை அடுத்து ஆவேசமடைந்த லாஸ்லியா, கவின், சாண்டி தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறி வனிதாவின் வாயை அடைக்க முயற்சி செய்தார். ஆனால் யாருக்கும் அடங்காத வனிதா லாஸ்லியாவிடமும் ஆத்திரத்துடன் பதில் கூறி வருகிறார். அதுமட்டுமின்றி மற்றவர்கள் விட்டுக்கொடுத்து பெரும் பிக்பாஸ் பட்டம் உனக்கு தேவையா? என தர்ஷனையும் வனிதா உசுப்பேற்றிவிட்டார்.
தர்ஷன், கவின், லாஸ்லியா சாண்டி ஆகிய நால்வரும் வனிதாவை சுற்றி வளைத்துக்கொண்டு ஆவேசமாக வாக்குவாதம் செய்ததால் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த களேபரத்திலும் சேரன் மௌனமாக இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
ஒரு போட்டியாளர் இன்னொரு போட்டியாளரை நாமினேட் செய்ய கூறும் காரணத்தை பிக்பாஸ் மட்டுமே விமர்சனம் செய்ய முடியும். கேப்டன் என்பதால் வனிதா பிக்பாஸ் போலவே நடந்து கொண்டது அனைவரையும் ஆத்திரமூட்டியது. மேலும் நேற்றைய வாக்குவாதத்தின் இடையே 'மக்கள் வெளியேற்றிய நீங்கள் மீண்டும் உள்ளே வந்தது மக்களின் முடிவை அவமானப்படுத்துவது போலாகும் என்று கூறியது வனிதாவை மேலும் ஆத்திரமடைய செய்தது. இதுவரை ரொமான்ஸ் மற்றும் அமைதியான கவினை மக்கள் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது பொங்கி எழுந்த கவினை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இனிமேல் தான் நான் ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறேன் என்று கவின் கூறியிருந்த நிலையில் நேற்று முதல் அவர் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டதாகவே தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com