வனிதாவை வெளியேற்ற ஹவுஸ்மேட்ஸ் கோரிக்கை! என்ன செய்வார் பிக்பாஸ்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வரலாற்றில் பார்வையாளர்களால் வெளியேற்றப்பட்ட ஒரு போட்டியாளர் மீண்டும் போட்டியாளராக அனுமதிக்கப்பட்டது வனிதா மட்டுமே என்று பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கஸ்தூரியும் இதனையே கூறினார்.
இந்த நிலையில் தற்போது வீட்டில் உள்ள போட்டியாளர்களும் வனிதாவை வெளியேற்ற வேண்டும் என்று கமல்ஹாசனிடம் நேற்று கோரிக்கை வைத்தனர். வீட்டில் உள்ள ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்றால் யாரை வெளியேற்றுவீர்கள்? என்ற கமல்ஹாசன் கேள்விக்கு சாண்டி, முகின், கவின், சேரன், தர்ஷன் ஆகியோர் வனிதாவை வெளியேற்ற வேண்டும் என்று கூறினர். வனிதா வெளியில் சென்று இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே வந்ததால் அவரது கேம் வித்தியாசமாக இருப்பதாக பலர் தெரிவித்தனர். தர்ஷன் மட்டும் வனிதா வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மத்தியில் சண்டை மூட்டி விடுவதாக குற்றஞ்சாட்டினார்.
ஆனால் அதே நேரத்தில் வனிதாவை வெளியேற்ற ஷெரின் எதிர்ப்பு தெரிவித்தார். வனிதாவால் தான் தற்போது எல்லோரும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருப்பதாகவும் அவர் வெளியேறிவிட்டால் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? என்று ஷெரின் கேள்வி எழுப்பினார். அதேபோல் லாஸ்லியாவும் ஒருசில போல்டான முடிவு எடுப்பதற்கு வனிதா கண்டிப்பாக தேவை என்று கூறினார்.
இந்த நிலைய்ல் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை, அடுத்த வாரமும் வனிதா கேப்டன் என்பதால் எவிக்சனில் இருந்து தப்பிவிடுவார். இதனை வைத்து பார்க்கும்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாஸ் வரை வனிதா இருப்பார் என்றே தோன்றுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments