பிக்பாஸ் வீட்டில் மேலும் 4 சிறப்பு விருந்தினர்கள்

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக முதல் மற்றும் இரண்டாம் சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் விருந்தினராக வருகை தந்து கொண்டிருந்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு 4 சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர். ரேஷ்மா, மீராமிதுன், மோகன் வைத்யா மற்றும் பாத்திமா பாபு ஆகிய நால்வர் பிக் பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்துள்ளனர். அவர்களை வெகு உற்சாகமாக போட்டியாளர்கள் வரவேற்கின்றனர்.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதால் சிறப்பு விருந்தினர்கள் நால்வர் வந்திருந்ததால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருக்கிறது. இதனால் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வரவேற்பு அளித்து கொண்டிருக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் மீரா இருந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையை கிளப்பி கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் இன்றும் அவர் ஏதாவது பிரச்சனையை கிளப்புவாரா? அல்லது அமைதியாக திரும்புவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

பிக்பாஸ் தர்ஷனின் முதல் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று தர்ஷன் எதிர்பாராத வகையில் வெளியேறினார். எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் பிக்பாஸ், தர்ஷன் வெளியேற்றம் என்ற ஷாக் ட்ரீட்மெண்டை ஆடியன்ஸ்களுக்கு

'தளபதி 64' லோகேஷனை தேர்வு செய்த லோகேஷ் கனகராஜ்

விஜய் நடிக்கவிருக்கும் 64வது படமான 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மேனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர்

தமிழ் நடிகருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி கொடுத்த டிடிவி தினகரன்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்த நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகி அதன் பின் அவர் தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்

பிக்பாஸ் எவிக்சன்: சாண்டியிடம் முக்கிய பொறுப்பை கொடுக்கும் கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு ஏற்கனவே கோல்டன் டிக்கெட்டை பெற்றதன் மூலம் முகினும், இந்த வாரம் வாக்குகளால் காப்பாற்றப்பட்ட சாண்டியும் தகுதி பெற்றுவிட்ட நிலையில்

ஞானவேல்ராஜா மீது சட்ட நடவடிக்கை: ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை

கமல்ஹாசனுக்கு ரூ.10 கோடி தந்ததாகவும், அந்த பணத்திற்கு தனது நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து தருவதாக கமல்ஹாசன் வாக்களித்திருந்ததாகவும்