நீ போயிட்டா நான் ஜாலியா இருப்பேன்! ஷெரினை கலாய்க்கும் தர்ஷன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில வாரங்களில் அனேகமாக கவின், லாஸ்லியா இல்லாத புரமோஷன் வீடியோ இன்று வெளிவந்துள்ள முதல் வீடியோவாகத்தான் இருக்கும். ஆனாலும் இந்த புரமோவிலும் ரொமான்ஸ் தான் உள்ளது.
இன்றைய புரமோ வீடியோவில் ஷெரினிடம் தர்ஷன் 'நாளை மறுநாள் வீட்டை விட்டு போய்விடுவாயா? என்று கேட்கின்றார். இந்த வாரம் எவிக்சன் இல்லை என்பது நமக்கு தெரிந்திருந்தாலும் போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் எவிக்சன் பட்டியலில் உள்ள ஷெரினிடம் தர்ஷன் இந்த கேள்வியை கேட்கின்றார். அதற்கு ஷெரின் ஆமாம் போயிவிடுவேன் என்று கூற, நீ போய்விட்டால் நான் ஜாலியாக இருப்பேன் என்று கூறுகிறார்.
பின்னர் ஷெரினை நோக்கி, நீ விலகினால் நொடியில் என மனம் தாங்காதே, என்னை விட்டு நீ போகாதே, அன்பே.. என பாட அதற்கு ஷெரின் சிரித்து கொண்டே செல்கிறார். ஷெரின் , தர்ஷன் ரொமான்ஸ் காட்சியை சாண்டி, முகின் ஆகியோர் அமைதியாக பார்த்து கொண்டிருக்கின்றனர்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த போட்டியை சுவாரஸ்யமாக்குவதற்கும், தங்களை முன்னிலைப்படுத்துவதற்கும் காதலை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவது மூன்று சீசன்களிலும் தொடர்கிறது. பிக்பாஸ் வீட்டில் காதலித்த எந்த ஒரு ஜோடியும் வெளியே வந்தவுடன் காதலை தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Day68 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/VVZZDek38R
— Vijay Television (@vijaytelevision) August 30, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments