ஆன்ட்டியுடன் ரொமான்ஸ் செய்யும் தர்ஷன்

  • IndiaGlitz, [Wednesday,July 10 2019]

பிக்பாஸ் வீட்டில் ஒருபக்கம் சண்டை, சச்சரவு என தினமும் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் ரொமான்ஸூக்கும் பஞ்சமில்லை. ஒருபக்கம் கவின் நான்கு பெண்களிடம் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் முகினிடம் அபிராமி ரொமான்ஸ் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தர்ஷனுக்கும் ஆள் கிடைத்துவிட்டது. அவர் ஷெரினுடன் ரொமான்ஸ் செய்கிறார். நான் ஷெரின் டார்லிங்கை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் ஷெரின் எனக்கு தேவதை போல் தெரிந்ததாகவும் அந்த அழகை பார்த்ததும் இனிமேல் சாகிற வரை சன்னியாசியாகவே இருப்பேன் என்றும் ரொமான்ஸ் செய்கிறார்.

ஷெரினை தர்ஷன் ரொமான்ஸ் செய்வது டாஸ்க்காக இருந்தால் ஓகே. இல்லையெனில் ஆன்ட்டியுடன் தர்ஷன் ரொமான்ஸ் செய்வதாக நெட்டிசன்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனாலும் நடிப்பாக இருந்தாலும் கவின், முகின் காதலைவிட இந்த காதல் எரிச்சலை தரவில்லை என்பது என்னவோ உண்மைதான்.