பிக்பாஸ் வீட்டில் இன்று தர்ஷன் தினம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தினமும் ஒவ்வொரு போட்டியாளரின் உறவினர்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே. முதல் நாள் முகின் தாயார் மற்றும் சகோதரி, மற்றும் இரண்டாம் நாள் லாஸ்லியா குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நிகழ்வு நெகிழ்ச்சியாக இருந்தது
குறிப்பாக லாஸ்லியா தனது தந்தையை பத்து வருடங்கள் கழித்து பார்த்ததும், லாஸ்லியாவின் தந்தை அவருக்கு கூறிய அறிவுரையும் நேற்றைய நிகழ்ச்சியின் நெகிழ்ச்சியான காட்சிகள் ஆகும். ஒரு முழு செண்டிமெண்ட் திரைப்படத்தில் கூட இவ்வளவு இயல்பான செண்டிமெண்ட் காட்சிகள் இருந்திருக்குமா? என்பது சந்தேகமே
இந்த நிலையில் இன்று தர்ஷன் தினமாக பிக்பாஸ் வீடு மாறுகிறது. ஆம், தர்ஷனின் தாயார் மற்றும் சகோதரி பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று வருகின்றனர். தாயாரை பார்த்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அவரை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார் தர்ஷன். இந்த நிலையில் தர்ஷனின் தாயாரின் பிறந்த நாளும் பிக்பாஸ் வீட்டில் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது
இன்று தர்ஷன் குடும்பத்தினர் வந்ததையடுத்து இன்று மேலும் ஒரு போட்டியாளரின் குடும்பத்தினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்களே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் சண்டை சச்சரவின்றி ஒரு உணர்ச்சிகரமான வாரமாக இந்த வாரம் இருக்கும் என்றும் கருதப்படுகிறது
#Day81 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/bCHMQiFG6H
— Vijay Television (@vijaytelevision) September 12, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout