ஷெரினுக்காக காரசாரமான ரிஸ்க் எடுக்கும் தர்ஷன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று சேரன் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் தற்போது கவின், முகின், தர்ஷன், ஷெரின், லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய 6 பேர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஒவ்வொரு திங்கள்கிழமையும் எவிக்சன் பட்டியலுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்படும் நிலையில் இன்று வித்தியாசமாக காப்பாற்றப்படும் நபர்களின் பெயர்களை பிக்பாஸ் கேட்கின்றார்.
முதலில் கன்பக்சன் அறைக்கு வரும் தர்ஷன், தான் ஷெரினை காப்பாற்ற விரும்புவதாக கூறுகிறார். இதனை அடுத்து ஷெரின் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் ஒரு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என்று பிக்பாஸ் நிபந்தனை விதிக்க, அதன்படி சேர்ந்த ஒரு பச்சை மிளகாயை காரசாரமாக சாப்பிடுகிறார் தர்ஷன்.
இதனை அடுத்து இன்னொருவரை காப்பாற்ற வேண்டும் என்றால் இன்னொரு பச்சைமிளகாயை சாப்பிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும் நிலையில் சாண்டிக்காக இன்னொரு பச்சை மிளகாயையும் அவர் சாப்பிடுகிறார்.
தர்ஷனை போலவே மாற்ற போட்டியாளர்கள் யார் யாருக்காக பச்சைமிளகாயை சாப்பிடுகிறார்கள் என்பதை இனிவரும் புரோமோ வீடியோக்களில் பார்ப்போம்.
#Day92 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/BICPxH2gdH
— Vijay Television (@vijaytelevision) September 23, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments