நைட்டு ரெண்டு மணிக்கு என்ன ஃபிரெண்ட்ஷிப்? கவினை போட்டு தாக்கும் ஹவுஸ்மேட்ஸ்
- IndiaGlitz, [Thursday,August 01 2019]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்ப நாட்களில் கவின், பிக்பாஸ் வீட்டின் ஹீரோ போல் வலம் வந்து கொண்டிருந்தார். அவரை சுற்றி எப்போதும் நான்கு அல்லது ஐந்து பெண்கள் இருப்பார்கள். பிக்பாஸ் வீடே கலகலப்பாக இருக்கும். ஒவ்வொரு பெண் போட்டியாளரையும் மச்சான் மச்சான் என்று அழைத்து அவரும் சந்தோஷமாக இருந்து, மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருந்தார். அவருடைய இந்த போக்கு போட்டியாளர்களிடம் மட்டுமின்றி பார்வையாளர்களும் அவர் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தனர்
இந்த நிலையில் இதுவரை ஹீரோவாக பிக் பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருந்த கவின் தற்போது திடீரென வில்லன் ஆகிவிட்டார்.
சாக்சியை கழட்டிவிட்டு பிரேக் அப் என அறிவித்ததில் இருந்தே சாக்சியின் தோழிகள் அவர் மீது செம கடுப்பாக இருக்கும் நிலையில் சாக்சியை பிரேக் அப் செய்த அடுத்த வினாடியே லாஸ்லியாவுடன் அவர் நெருக்கமாக பழகியது உறுத்தலாக இருந்தது.
கவினின் இந்த திடீர் மாற்றத்தை சக போட்டியாளர்கள் இன்று கண்டித்தனர். தர்ஷன் ஒரு படி மேலே போல் இரவு இரண்டு மணிக்கு என்ன பிரண்ட்ஷிப் வேண்டியிருக்கின்றது' என்று கொஞ்சம் கோபமாகவே கூறினார்.
மதுமிதாவும் லாஸ்லியாவுடன் இரவு முழுவதும் பேச வேண்டிய அவசியம் என்ன? என மாறி மாறி மாறி கேள்வி கேட்டதால் கவின் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். இதனையடுத்து கவினின் சுயரூபம் தற்போது வெளிப்பட்டதாகவே கருதப்படுகிறது. மேலும் கவினுக்கு யாருமே ஆதரவு இல்லாத நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
#Day39 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/WRLv95q6UV
— Vijay Television (@vijaytelevision) August 1, 2019