நான் ஜெயிச்சிட்டேன்: வைரலாகும் தர்ஷனின் முதல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் டைட்டில் வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த தர்ஷன் கடந்த வாரம் யாரும் எதிர்பாராத நிலையில் வெளியேறினார். இந்த நிலையில் தர்ஷன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
முதலில் நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் வெளியே வந்தவுடன் முதலில் இந்த வீடியோவை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை .அதற்குத்தான் இந்த மன்னிப்பு. நான் வெளியே வந்தவுடன் தான் தெரிந்தது எனக்கு எந்த அளவுக்கு அன்பு கிடைத்தது என்பது. இந்த வீடியோ பதிவு செய்ய முக்கிய காரணம் நீங்கள்தான். உங்களை நான் என்னுடைய ரசிகர்கள் என்று சொல்வதா? நண்பர்கள் என்று சொல்வதா? என்று தெரியவில்லை. ஆனால் உங்களை எனது குடும்பம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்
சில விஷயங்களை நாம் கனவு காணலாம். ஆனால் அந்த கனவையும் தாண்டி ஒருவிஷயம் எனக்கு நடந்துள்ளது. இதற்கெல்லாம் நன்றி என்ற ஒரே ஒரு சொல்லை தெரிவித்துவிட்டு ஒதுங்கிவிட நான் விரும்பவில்லை
பொதுவாக ஒரு விஷயத்தை சொல்வதற்கு நாங்கள் ரொம்ப யோசிப்போம். இந்த விஷயத்தைச் சொன்னால் தன்னைத்தானே பெருமையாக பேசிக் கொள்கிறேன் என்று சிலர் நினைப்பதுண்டு. ஆனால் இந்த விஷயத்தை நான் பெருமையாகவும் கர்வத்துடனும் சொல்லிக்கொள்வது என்னவெனில் பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 16 பேர் போட்டியாளர்கள் இருந்தனர். அனைவருக்கும் ரசிகர்கள் மட்டுமே கிடைத்தனர். ஆனால் எனக்கு மட்டும் தான் ஒரு பெரிய குடும்பமே கிடைத்தது என்பதை நான் பெருமையுடன் செல்வேன்
மேலும் எல்லோரும் என்னிடம் ஒரு விஷயத்தை கேட்டனர். நீங்கள் டைட்டில் வெற்றி பெறவில்லை என்பதற்காக வருத்தப்படுகிறீர்களா என்று கேட்டார்கள். ஆனால் உண்மையில் எனக்கு வருத்தமே இல்லை. டைட்டிலை விட இப்படி ஒரு குடும்பம் கிடைத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். அந்த விஷயத்தில் நான் ஜெயிச்சிட்டேன் . இ
மேலும் இன்னொரு விஷயம் என்னவெனில் தற்போது வீட்டில் இருக்கும் நான்கு போட்டியாளர்களுக்கு ஓட்டு போடுங்கள். யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல மாட்டேன். உங்களுக்கே தெரியும் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று. யாருக்கும் பரிதாபத்தை பார்த்து யாருக்கும் ஓட்டு போடாதீர்கள், உண்மையிலேயே யார் நன்றாக விளையாடுகிறார்கள் என்பதை முடிவு செய்து ஓட்டு போடுங்கள். எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை தற்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்
மேலும் உங்கள் எல்லோரையும் தனித்தனியாக சந்திக்கவேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. கூடிய சீக்கிரம் அது நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்
இவ்வாறு தர்ஷன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Hey friends,
— Tharshan shant (@TharshanShant) October 1, 2019
Happy to be back with you all again. Sorry for the delay guys. This is my first message after coming out from BB3. Love you all ❤️❤️
P.S This is my only official account pic.twitter.com/ztLWEyFMSk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments