விஜய்சேதுபதிதான் காரணம்: மொட்டை கடிதத்திற்கு விளக்கமளித்த சேரன்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு வந்த மொட்டை கடிதத்திற்கு விளக்கமளித்த நிலையில் சேரனிடம் கேட்கப்பட்ட கேள்வியான 'நீங்கள் பெற்ற விருது, புகழுக்கு மேல் பிக்பாஸில் என்ன கிடைத்துவிட போகிறது? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

நான் சினிமாவில் பெயர், புகழ் பெற்றது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் நான் சினிமாவில் பெரும் போராட்டத்திற்கு இடையே தான் வாழ்ந்து வந்தேன். நான் அனுபவித்த சந்தோசமான கடைசி வெற்றி ஆட்டோகிராப் வெற்றி தான். அதன் பின்னர் நான் பெரும் போராட்டங்களுக்கிடையே தான் சினிமாவில் இயக்குனராக காலம் நடத்தினேன்.

மேலும் எனக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி நான்கு வருடம் ஆகிவிட்டது. என்னுடைய முகத்தை நான் மறுபடியும் அறிமுகம் செய்ய ஒரு பிளாட்பார்மை தேடினேன். அப்போதுதான் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. என்னை அனுப்பி வைத்தது விஜய்சேதுபதிதான். அவர் என்னிடம், 'நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்கு செல்வதன் மூலம் உங்களுக்கு இன்றைய இளைய தலைமுறை இடையே ஒரு அறிமுகம் கிடைக்கும். அது மட்டுமின்றி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தித்த பெரும் போராட்டங்கள், அனுபவங்கள் அவற்றையெல்லாம் நீங்கள் நேரம் கிடைக்கும்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசினால் அந்த அனுபவங்கள் பலருக்கு ஒரு பாடமாக இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியை கிராமம் முதல் நகரம் வரை அனைவரும் பார்க்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் உங்களுடைய அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். அதனால் நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று விஜய் சேதுபதியின் எனக்கு கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா? வேண்டாமா? என்ற ஒரு குழப்பம் எனக்கும் எனது குடும்பத்தினர்களுக்கும் இருந்த நிலையில் அவருடைய இந்த அறிவுறுத்தல் எனக்கு சரியாக தெரிந்தது. அதன்பின்னரே நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்தேன்' என்று சேரன் விளக்கம் அளித்தார்

More News

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் சச்சின் தெண்டுல்கர்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்

சாக்சி என்னை காலி பண்றா? கவின் ஆவேசம், லாஸ்லியா கண்ணீர்

பிக்பாஸ் வீட்டில் கவின் சாக்சி, லாஸ்லியா என்ற முக்கோண காதல் விவகாரம் கடந்த இரண்டு வாரங்களாக உச்சக்கட்டத்தில் உள்ளது. கவின், சாக்சி இடையேயான காதல் நேற்று பிரேக் அப் ஆகிவிட்டது.

'பிக்பாஸ்' அபிராமி குறித்து 'நேர் கொண்ட பார்வை' நாயகி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டு நூலிழையில் தப்பித்து வரும் அபிராமி இந்த வாரமும் நாமினேஷனில் இருந்தாலும், அவருக்கு கிடைத்து கொண்டிருக்கும்

வெங்கட்பிரபு வெளியிட்ட சிவாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்

நடிகர் சிவா நடித்த 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கிய 'பார்ட்டி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பிகிலுக்கு கொடுக்கும் எழுச்சியை இதற்கும் கொடுங்கள்: நடிகர் விவேக் வேண்டுகோள்

பிகில் படத்திற்கு கொடுக்கும் எழுச்சியை தாய் மண்ணுக்காகவும் மரங்களுக்காகவும் கொடுக்க வேண்டும் என நடிகர் விவேக், மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.