இந்த வார எவிக்சன் பட்டியலில் சிக்கிய சேரன் - கஸ்தூரி! யார் வெளியேற வாய்ப்பு?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் எவிக்சன் பட்டியலில் சேரன், கஸ்தூரி, தர்ஷன் மற்றும் சாண்டி ஆகிய நால்வர் சிக்கியுள்ளனர்.
நேற்றைய எவிக்சன் படலத்தின்போது சாண்டி, தர்ஷன் ஆகியோர்களை வனிதாவும், சேரன், கஸ்தூரி ஆகியோர்களை கவின், முகின், சாண்டி, லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர்களும், சாண்டி, தர்ஷன் ஆகியோர்களை சேரனும், முகின், கஸ்தூரி ஆகியோர்களை ஷெரினும், கவின், சேரன் ஆகியோர்களை கஸ்தூரியும் நாமினேட் செய்தனர்.
கவின் தலைமையிலான குழுவில் உள்ள முகின், சாண்டி, தர்ஷன், லாஸ்லியா ஆகிய அனைவருமே சேரன், கஸ்தூரியை நாமினேட் செய்ததால் இருவரும் எவிக்சனில் சிக்கியுள்ளனர். தர்ஷன் மற்றும் சாண்டி ஆகிய இருவரும் எவிக்சன் பட்டியலில் இருந்தாலும் பார்வையாளர்களிடம் இருவருக்கும் அதிக ஆதரவு இருப்பதால் இருவருமே வெளியேற வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே சேரன் அல்லது கஸ்தூரி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாகவும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றம் தந்த கஸ்தூரி இந்த வாரம் வெளியேற வாய்ப்பு அதிகம் என்றும் கருதப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com