நான் தான் ஃபர்ஸ்ட்: தர்ஷனை பின்னுக்கு தள்ளிய சேரன்
- IndiaGlitz, [Tuesday,September 17 2019]
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் டாஸ்க் நடைபெற்று வருகின்றன. நேற்றைய டாஸ்குகளில் தர்ஷன் அதிக புள்ளிகள் எடுத்துள்ளார். இருப்பினும் இனி வரும் நான்கு நாட்களிலும் அதிக புள்ளிகள் எடுக்கும் நபரே இறுதிப்போட்டிக்கு செல்ல தகுதி வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று 1 முதல் 7 வரை போட்டியாளர்களை வரிசைப்படுத்தும் டாஸ்க் நடக்கின்றது. இதில் போட்டியாளர்களில் பலர் முதலிடத்தில் தர்ஷனை வைத்திருக்கும் நிலையில் சேரன் மட்டும் தர்ஷனின் புகைப்படத்தை முதலிடத்தில் இருந்து அகற்றிவிட்டு தன்னுடைய புகைப்படத்தை வைக்கிறார்.
அதன்பின் அவர் கூறும் விளக்கம் என்னவெனில் ’முதலிடம் நான்தான் அப்பத்தான் நான் ஃபர்ஸ்ட் வரமுடியும். இங்கே இருக்கும் எல்லாரையும் விட எனக்கு வயது கொஞ்சம் அதிகம். அனுபவமும் அதிகம். பலர் என்னிடம் இந்த போட்டியில் இளைஞர்கள் தானே ஜெயிப்பார்கள். உங்களுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்டார்கள். இங்கே இருக்கும் அனைவருக்கும் தனித்தனியே ஃபாலோயர்கள் உண்டு, ஆர்மி உண்டு, ரசிகர்கள் உண்டு. ஆனால் அவர்கள் அனைவரும் எனக்கும் ஃபாலோயர்கள். எனவே நான் கண்டிப்பாக ஜெயிப்பேன்’ என்று அவர்களுக்கு பதில் சொன்னேன் என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்'. சேரனின் தன்னம்பிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day86 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/oWpsytFbv0
— Vijay Television (@vijaytelevision) September 17, 2019