நான் தான் ஃபர்ஸ்ட்: தர்ஷனை பின்னுக்கு தள்ளிய சேரன்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் டாஸ்க் நடைபெற்று வருகின்றன. நேற்றைய டாஸ்குகளில் தர்ஷன் அதிக புள்ளிகள் எடுத்துள்ளார். இருப்பினும் இனி வரும் நான்கு நாட்களிலும் அதிக புள்ளிகள் எடுக்கும் நபரே இறுதிப்போட்டிக்கு செல்ல தகுதி வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று 1 முதல் 7 வரை போட்டியாளர்களை வரிசைப்படுத்தும் டாஸ்க் நடக்கின்றது. இதில் போட்டியாளர்களில் பலர் முதலிடத்தில் தர்ஷனை வைத்திருக்கும் நிலையில் சேரன் மட்டும் தர்ஷனின் புகைப்படத்தை முதலிடத்தில் இருந்து அகற்றிவிட்டு தன்னுடைய புகைப்படத்தை வைக்கிறார்.

அதன்பின் அவர் கூறும் விளக்கம் என்னவெனில் ’முதலிடம் நான்தான் அப்பத்தான் நான் ஃபர்ஸ்ட் வரமுடியும். இங்கே இருக்கும் எல்லாரையும் விட எனக்கு வயது கொஞ்சம் அதிகம். அனுபவமும் அதிகம். பலர் என்னிடம் இந்த போட்டியில் இளைஞர்கள் தானே ஜெயிப்பார்கள். உங்களுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்டார்கள். இங்கே இருக்கும் அனைவருக்கும் தனித்தனியே ஃபாலோயர்கள் உண்டு, ஆர்மி உண்டு, ரசிகர்கள் உண்டு. ஆனால் அவர்கள் அனைவரும் எனக்கும் ஃபாலோயர்கள். எனவே நான் கண்டிப்பாக ஜெயிப்பேன்’ என்று அவர்களுக்கு பதில் சொன்னேன் என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்'. சேரனின் தன்னம்பிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்திலும் மாற்றுத்திறனாளியாகும் நயன்தாரா!

விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  நடித்திருந்த நிலையில் அவருடைய அடுத்த படத்திலும்

சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தமிழில் முதல்முறையாக 'புதுவசந்தம்' என்ற படத்தை தயாரித்தது.

கடைசியில எது ஜெயிக்கும்... சிங்கமா? நரியா? 'மாஃபியா' டீசர் விமர்சனம்

'துருவங்கள் 16' என்ற ஹிட் படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் அடுத்த படம் 'மாஃபியா'.

 ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேதரின் தெரசா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில்!

பிரபல நடிகைகளான  ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேதரின் தெரசா ஆகிய மூவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்ற செய்தி ஏற்கன்வே தெரிந்ததே.

வேற வழியில்ல குருநாதா! சாண்டி நாமினேட் செய்த இருவர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் படலம் நடந்து வருகிறது. இதுவரை மோசமாக விளையாடியவர்களை நாமினேஷன் செய்த போட்டியாளர்கள் தற்போது இறுதிக்கட்டத்தில்